By 6 September 2009 0 Comments

பலவந்தமாக அவுஸ்திரேலியாவிலிருந்து நான்காவது இலங்கையர் நாடுகடத்தல்

plotesithartan1தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி விவரம் பின்வருமாறு:.. (நேர்காணல் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
கேள்வி: நடந்து முடிந்த யாழ். உள்ளுராட்சித் தேர்தல்களில் உங்கள் கட்சி தோல்வியடைந்தது. விசேடமாக, வவுனியாப் பிரதேசம் உங்கள் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்பட்டது. அதில்கூட உங்களால் வெற்றியடைய முடியவில்லையே?
பதில்: வவுனியாவை பொறுத்தமட்டில் நாங்கள் நகர சபையை வெல்வோம் என்று முற்றுமுழுதாக நம்பினோம். இந்தத் தோல்விக்குச் சில காரணங்கள் இருக்கின்றன. வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதற்கு விடுதலைப் புலிகள் மீது மக்கள் கொண்டிருந்த அனுதாபமே பிரதான காரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாகவே மக்கள் அதற்கு வாக்களித்தனர். இது தொடர்பில் அந்தப் பிரதேச மக்களுடன் கதைத்த போது இதனையே அவர்களும் தெரிவித்தனர். புலிகள் மீது மக்கள் கொண்ட அனுதாபம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளாகக் கிடைத்தன. இது இங்கு மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும்தான். இதுவும் எங்கள் தோல்விக்குக் காரணம். வவுனியாவில் தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களும் எங்களுக்குத் தோல்வியைத் தந்தன. அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகள் எமது ஆதரவாளர்களைப் பயமுறுத்தியதன் காரணமாக அவர்கள் வாக்களிக்கச் செல்லவில்லை. ஆனால், நாம் தோல்வியடைந்ததற்கான முழுப் பொறுப்பினையும் மற்றவர்கள் தலையில் முற்றாக சுமத்திவிடப் போவதில்லை. நாங்களும் பிழைகள் விட்டுள்ளோம். எமது கட்சிக்கும் எமது மக்களின் தேவைகளுக்குமான பணத்தை நாம் வவுனியா வர்த்தகர்களிடமிருந்தே பெற்று வந்தோம். இதனை நாம் மட்டும் செய்யவில்லை. கடந்த காலங்களில் நாம் ஆயுதம் ஏந்தியவர்களாக இருந்தோம். இந்த நிலையில் நாம் வர்த்தகர்களிடம்” நிதி கேட்கும்போது நாம் ஆயுதபலத்தைக் கொண்டே பணம் கேட்பதாக அவர்கள் நினைத்திருக்கலாம். இதன் காரணமாக அவர்கள் அதிருப்தியடைந்து எமக்கு வாக்களிக்காமலும் விட்டிருக்கலாம். ஆகவே, நாம் இப்படி நடந்து கொண்டமை தவறாக இருக்கலாம். ஆனால்”, இவ்வாறு பெற்றுக் கொண்ட நிதி எமது கட்சிக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை, வவுனியா மக்களின் நலன்களுக்குமே பயன்படுத்தப்பட்டன. இதற்கு உதாரணமாக ஒரு விடயத்தை இங்கு கூற விரும்புகிறேன். வன்னியில் மிகப் பெரிய அவலத்துக்கு மத்தியில் அங்கிருந்து வவுனியாவுக்கு வந்த மக்களுக்குத் தேவைப்பட்ட உதவிகளைச் செய்தோம். அதற்காக செலவிடப்பட்ட பணம் வவுனியா வர்த்தகர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதே. ஆனால் எந்த வர்த்தகரிடமிருந்தும் மிரட்டிப் பணம் பெறவில்லை. இதன் காரணமாக இன்று நாம் இருதலைக்கொள்ளி எறும்பு போல் உள்ளோம். மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதா? அல்லது வர்த்தகர்களிடமிருந்து பணம் பெறுவதா? ஆனால் நாம் எமது மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதனையே விரும்புகிறோம். எமது மக்களுக்கான உதவியில் அரசாங்கத்தை மட்டும் நாம் நம்பிக் கொண்டிருக்க முடியாது. எம்மாலானவற்றையும் செய்ய வேண்டும் என்பதே எமது விருப்பம். இதேவேளை, நாம் எமது நிலைப்பாட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாய நிலையேற் பட்டுள்ளது. இது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். அதன் மூலம் மக்கள் எமது நிலைப்பாட்டை அறிந்து கொள்வர்.

கேள்வி: பாதுகாப்பு அமைச்சு உங்களுக்குப் பணம் வழங்குகிறது தானே?

பதில்: இப்போது எமக்கு பாதுகாப்பு அமைச்சு பணம் தருவதில்லை. 2004 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போதே அது நிறுத்தப்பட்டு விட்டது.

கேள்வி: உங்கள் கட்சிக்கு மட்டுமா?

பதில்: இல்லை.. இல்லை.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்திருக்கும் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்றவற்றுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டவுடன் எங்களுக்கான நிதியும் நிறுத்தப்பட்டது.

கேள்வி: உங்கள் கட்சியின் தோல்விக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா?

பதில்: இன்னும் ஒரு சில காரணங்கள் உள்ளன. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் அவர்கள் வவுனியாப் பிரதேசத்தில் இல்லாமையேயாகும். ஆள் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிக்க முடியாத நிலை. இவற்றின் காரணமாகவும் எமக்குத் தோல்வி ஏற்பட்டது.

கேள்வி: வன்னியிலிருந்து வெளியேறிய மக்கள் வவுனியாவுக்கு வந்து சேர்ந்த காலகட்டத்தில் அந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை உங்கள் இயக்கம் செய்து வந்தது. ஆனால், அந்த உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டமைக்கு என்ன காரணம்? நலன்புரி முகாம்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதா?

பதில்: வன்னியிலிருந்து பெரும் அவலத்துக்கு மத்தியில் வவுனியாவுக்கு வந்த மக்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கக் கூடிய சந்தர்ப்பம் ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்தது. அந்த மக்கள் அப்போது முகாம்களில் அல்லாமல் ஓமந்தையிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பப் பட்டதுடன் அங்கு செல்ல எம்மை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் நாம் வவுனியா செயலகம் மூலம் உதவிகளை வழங்கினோம்.

கேள்வி: உங்களது கட்சி அரசுடன் இணையாவிட்டாலும் அரசு சார்புத் தன்மையைக் கொண்டது. இந்த நிலையில் நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிட்டிருப்பின் வெற்றி பெற்றிருக்க முடியாதா?

பதில்: எங்களது மக்களின் அடிப்படை அபிலாஷைகளை விட்டுக் கொடுக்காமல் அரசியல் ரீதியாக ஒரு சரியான அதிகாரப் பரவலாக்கம் வேண்டுமென்று போராடும் அதே நேரத்தில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் நீக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாகவும் சுயகௌரவத்துடனும் வாழும் நிலை ஏற்பட வேண்டுமென்பதில் நாங்கள் கருத்தாகவுள்ளோம்”. எமது மக்களின் பிரச்சினைகளை உணர்ச்சி பொங்கக் கூறி விட்டு, அதனையே அரசியலாக மாற்றி வியாபாரம் செய்ய நாம் தயார் இல்லை.

எமது தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சுயகௌரவத்துடன் வாழ வேண்டுமென்ற எமது இலக்கை அடையவோ அல்லது அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவோ ஒரு கட்சி வகையில் எம்மால் மட்டும் தனித்து நின்று செயற்பட முடியாது. இதற்கு அரசாங்கத்தின் உதவியும் எமக்குத் தேவைப்படுகிறது. கடந்த காலத்தில் வேறெங்கும் இடம்பெறாத அளவு அபிவிருத்திப் பணிகளை வவுனியாவில் நாம் செயது முடித்தோம். அரசுடன் நாம் வைத்திருந்த நல்லுறவே இதற்குக் காரணம். அதுமட்டுமல்ல, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்னெடுப்புகளுக்கும் எமது முழுமையான ஆதரவினை அரசுக்கு வழங்கி வந்துள்ளோம்.

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் ஒரு விடயத்தில் நாம் தெளிவாக இருந்தோம். தனி நாடு என்பது அடைய முடியாத ஓர் இலக்கு. இதற்காகத் தொடர்ந்து போராடுவதன் மூலம் மக்களின் அழிவைத்தான் நாம் காணப் போகிறோம். ஆகவே, ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறானதொரு தீர்வைக் காண்பதென்றால் அதற்கு அரசுடன் நல்லுறவு கொண்டு செயற்பட வேண்டும் என்ற இந்த விடயத்தில் நாம் இன்றும் தெளிவாகவே உள்ளோம். இதனை வைத்துக் கொண்டு அரசுக்கு நாம் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்குவதாக யாரும் அர்த்தம் கொள்ளக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட விடயங்களுக்கும் மற்றும் எமது பிரதேச அபிவிருத்திக்குமான உதவிகளைப் பெறும் பொருட்டே அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். தமிழ் மக்களின் கவலையைப் போக்க முடியாத நிலையில் வெறுமனே ஓர் அரசியல் கட்சியாக இருப்பதில் என்ன பயன்?”

கேள்வி: நடந்து முடிந்த தேர்தல் மூலம் தமிழ் பேசும் மக்கள் அரசுக்குக் கூறும் செய்தி என்ன?

பதில்: நிச்சயமாக தமிழ் மக்கள் எந்தத் தெளிவான செய்தியையும் கூறவில்லை. ஒரு குழப்பமான செய்தியையே அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதாகத் தென்னிலங்கை சிங்களக் கடுங்கோட்பாளர்களைக் கொண்ட கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பதில்: தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் ஆயுத ரீதியாக பலமடைவதற்கு அல்லது ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. தந்தை செல்வநாயகத்தின் தலைமையிலும்” அமிர்தலிங்கம் தலைமையிலும் ஆயுதப் போராட்டம் அல்லாத சாத்வீகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பல சத்தியாக்கிரகங்கள் நடைபெற்றன. பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன் சுதந்திரத்துக்குப் பின்னிருந்தே தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளனவென்பதனையே இவை வெளிக்காட்டுகின்றன. அப்போது ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. புலிகள் அமைப்பும் இருக்கவில்லை. இவ்வாறான ஒப்பந்தங்கள் நடைமுறைப் படுத்தப்படாமல் போனமைக்கு அன்றிருந்த சிங்கள கடும் போக்காளர்களே காரணம். பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் போது எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சில கருத்துகளைத் தெரிவித்தார். “கடும் போக்காளர்களின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த ஒப்பந்தம் இன்று கிழித்தெறியப்படுகிறது. ஆனால் இதன் விளைவுகளை எதிர்காலத்தில் அனுபவிக்க நேரிடும்’ என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் அன்று கூறியபடியே இன்று தமிழ் பேசும் சமூகம் மட்டுமல்ல முழு இலங்கையுமே மனிதப் பேரவலத்தையும் பேரழிவையும் எதிர்கொண்டு விட்டது. இதேவேளை, இப்போதுள்ள கடும் போக்காளர்களும் தமிழ் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படுவதனை எதிர்க்கிறார்கள். இது பாரிய விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதனை மறுதலிப்பதன் மூலம் இந்நாட்டில் நிம்மதியற்ற ஒரு சூழ்நிலையை இவர்கள் உருவாக்க முயறசிக்கின்றனர்.

அன்று பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப் பட்டிருந்தால் இன்று இந்தளவு அழிவுகளை இந்த நாடு எதிர்நோக்கியிருக்காது. அன்று செய்தட தவறையே இன்றுள்ள கடும் போக்காளர்களும் செய்யப் பார்க்கிறார்கள். இது இன்றைய நிலையில் முழு இலங்கைக்குமே ஆரோக்கியமான ஒன்றல்ல..

இவ்வாறான கடுங்கோட்பாளர்கள் நாடாளுமனகீல் கேட்டிருந்தபோதும் அவ்வாறு இல்லாமல் இவர் நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மேலதிக விசாரணைகள் நடத்தியிருந்தால் பெர்னாண்டோவின் நாடுகடத்தலும் சிறிது காலம்தள்ளிப்போக வாய்ப்பிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியன் பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்த பெர்ணான்டோ தாம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டது சோகமான விடயம் என்றும் தினம் தினம் பிரச்சனைகளால் இங்கு ஒழிந்திருந்து இலங்கையில் வாழவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார் மேலும் மீண்டும் ஒருதடவை அவுஸ்திரேலியா விசாவை தாம் ஆபத்துக்கள் இருந்தாலும் இல்லை படகு மூலம் பயணிக்கஎண்ணியுள்ளாராம் பெர்ணான்டோ சென்ற படகில் 12பேர் மொத்தமாக இருந்தனர் அவர்களில் 10பேர் ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பப்பட்டு விட்டனர் அதில் மூன்றுபேர் இவரைப்போல் பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டவர்கள் ஆவர் இதில் ஒருவர் இந்திகா மென்டிஸ் அவர் தற்போது கொழும்பு சிறையில் இருக்கிறார்.Post a Comment

Protected by WP Anti Spam