ஜாக்சன் அணிந்த கிளவுஸ் 66,000 டாலருக்கு ஏலம்

Read Time:1 Minute, 44 Second

mickaljackson-glove-200மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த வெள்ளை நிற கையுறை, 66,000 டாலர் தொகைக்கு ஏலம் போயுள்ளது. விக்டரி டூர் என பெயரிடப்பட்ட இசைப் பயணத்தை 1984ம் ஆண்டு மேற்கொண்டார் ஜாக்சன். அதன் ஒரு பகுதியாக லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் டிசம்பர் 3ம் தேதி அவர் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அவர் அணிந்திருந்த வெள்ளை நிற கையுறைதான் தற்போது ஏலத்திற்குப் போயுள்ளது. இது சாதாரண கையுறை அல்ல. 50 சிறிய விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட பிரமிக்கத்தக்க கையுறையாகும். ஜாக்சன் நினைவுப் பொருட்களிலேயே மிகவும் கவர்ச்சிகரமானது என வர்ணிக்கப்பட்டதாகும். இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலெஸ் அருகே உள்ள கலாபஸாஸ் என்ற இடத்தில் நடந்த ஏலத்தில் இந்த கையுறை மற்றும் ஜாக்சனின் பிற பொருட்களும் ஏலம் விடப்பட்டன. அதிகபட்சமாக கையுறை 66,000 டாலர்களுக்கு போனது. வெள்ளை நிற ஸ்வெட்டர் மற்றும் வெள்ளை நிற தொப்பி 44,250 டாலர்களுக்கு ஏலம் போனது. மஞ்சள் நிற டை மற்றும் சட்டை ஆகியவை 16,500 டாலர்களுக்குப் போனது. இதே நிகழ்ச்சியில் இன்டியானா ஜோன்ஸ் படத்தில் ஹாரிசன் போர்டு பயன்படுத்திய சாட்டையும் ஏலம் விடப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 611வது படையணியின் கட்டளைத்தளபதி வீதிவிபத்தில் உயிரிழப்பு
Next post தொண்டாமுத்தூர் அகதிகள் முகாம்-பெண் தற்கொலை