இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களில் 5198பேரை மாந்தையில் மீள்குடியேற்ற ஏற்பாடு

Read Time:1 Minute, 42 Second

இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களில் 5198பேர் மன்னார் மாந்தைப் பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 1200பேர் நாளையதினம் மீள்குடியமர்த்தப் படவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அடம்பன், ஆட்காட்டிவெளி, பரப்புக்கண்டல், ஆண்டாங்குளம், கண்ணாட்டி, கருங்கண்டல், காத்தான்குளம், மாளிகைத்திடல், நெடுங்கண்டல், பாளைப்பெருமாள்கட்டு, பாளைக்கொடி, பாப்பாமோட்டை, பரப்புக்கடந்தான் மற்றும் சொர்ணபுரி ஆகிய 14கிராமங்களிலேயே இந்த மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இம்மக்களுக்கு முதற்கட்டமாக தலா 5ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதுடன் 20ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை இடம்பெறவுள்ள இந்த மீள்குடியேற்ற நிகழ்வில் ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ச எம்.பி, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், மன்னார் அரசஅதிபர் ஏ.நீக்களாஸ்பிள்ளை, மன்னார் பிரதேச செயலர் ஸ்டேன்லி டிமெல் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 30வருடங்களின் பின்னர் யாழ்மாநகரசபைக்கு இரு பொறியியலாளர்கள் நியமனம்
Next post முகாம் மக்களை விடுவிக்கக்கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்..