18 பெண்களை கற்பழித்து கொலை செய்த ஆசிரியர்! -`சயனைட்’ கொடுத்து கொன்ற பயங்கரம்!!

Read Time:2 Minute, 55 Second

mangalore-murders200திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 18 பெண்களை கற்பழித்து அவர்களுக்கு சயனைடு மாத்திரை தந்து கொலை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த அனிதா (22) கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். அவரைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. காணாமல் போன அனிதாவின் செல்போனில் இருந்து சென்ற தொலைபேசி அழைப்புகள் குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது, கர்நாடகத்தில் ஏற்கனவே காணாமல் போயிருந்த சில பெண்களுக்கு அதிலிருந்து அழைப்புகள் சென்றது தெரியவந்தது. மேலும் அனிதா மற்றும் அந்தப் அந்த பெண்களின் செல்போன்களை ஒரு நபர் தொடர்பு கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதை வைத்து மோகன்குமார் என்பவனை போலீசார் மடக்கினர். அவன் தந்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 5 ஆண்டுகளில் 18 பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளதாக அவர் தெரிவித்தான். 30 வயதுக்கு மேல் ஆன திருமணம் ஆகாத படிப்பறிவு குறைந்த பெண்களை அணுகி வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, மயக்கி, வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று, ஹோட்டல்களில் தங்க வைத்து இவன் கற்பழித்துள்ளான். பின்னர் செக்ஸ் வைத்துக் கொண்டதால், திருமணத்திற்கு முன் கர்ப்பம் ஆகிவிடக்கூடாது என்று கூறி கருத்தடை மாத்திரைகளை தந்துள்ளான். ஆனால், அவன் தந்தது கருத்தடை மாத்திரைகள் அல்ல. அவை சயனைட் மாத்திரைகள். இதனால் அதை உண்ட பெண்கள் அனைவருமே அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்துள்ளனர். மோகன்குமார், 23 ஆண்டுகளாக பல இடங்களில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துள்ளான். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்த ஏமாற்றல்- கற்பழிப்பு- கொலைகளில் ஈடுபட்டு வந்துள்ளான். மோகன்குமாரிடம் இருந்து 8 சயனைடு பொட்டலங்கள், 4 செல்போன்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட அனிதா உள்ளிட்ட பெண்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகாம் மக்களை விடுவிக்கக்கோரி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்..
Next post ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறோம் -தமிழ் கூட்டமைப்பு