புலிகளின் 144 சிறார் போராளிகள் பள்ளியில் அனுமதி

Read Time:1 Minute, 55 Second

sri_lanka-003smallபுலிகள் அமைப்பில் இருந்த 144 முன்னாள் சிறார் போராளிகளை படிப்புக்காக பள்ளியில் சேர்த்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வந்த உள்நாட்டுப் போரின் போது புலிகள் அமைப்பில் இவர்கள் சேர்க்கப்பட்டு போர் முனையில் நிறுத்தப்பட்டிருந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது இவர்கள் சீர்திருத்த வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இவர்களில் 144 பேர் கொழும்பில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 81 பேர் சிறுவர்கள், 63 பேர் சிறுமிகள். இவர்கள் அனைவரும் வவுனியா மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் சிறார் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தி்ல் வைக்கப்பட்டு மன மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு தற்போது பள்ளியில் சேர்க்கப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இவர்களை நான்கு சிறப்பு பேருந்துகள் மூலம் கொழும்புக்குக் கொண்டு வந்த ராணுவம் அங்கு பள்ளியில் சேர்த்து விட்டது. 7 முதல் 11ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்னர். கொழும்பில் உள்ள ரத்னமாலா இந்துப் பள்ளியில் இவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், 114 மாணவ, மாணவியர் அடுத்த கட்டமாக இதே பள்ளியில் சேர்க்கப்படவுள்ளனராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரிஹர்சல் சத்தத்தால் எரிச்சல் – மடோனா மீது பக்கத்து வீட்டுக்காரர் வழக்கு
Next post அராலி வடக்கு சுரேஸ்குமார் மற்றும் கரவேப்பங்குளம் நிசாந்தன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது