மலேசியாவின் தடுப்புமுகாமிலுள்ள ஆறு இலங்கையர்கள் உண்ணாவிரதம்

Read Time:1 Minute, 37 Second

மலேசியாவின் பிரீக்கன் நனா தடுப்புமுகாமிலுள்ள ஆறு இலங்கையர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார். கடந்த மாதம் முறையான ஆவணங்கள் எதுவுமற்ற நிலையில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 108இலங்கையர்களுக்கு ஆதரவாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுடன் அரச சார்பற்ற நிறுவனமொன்று தொடர்பு கொண்டுள்ளதாக கூறுப்படுகின்றது. ஐ.நா சபையின் அகதிகள் பேரவையினால் தமது அந்தஸ்து நிர்ணயிக்கும்வரை அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பரென குறித்த நிறுவன இணைப்பாளர் ஈ.செல்வராஜா தெரிவித்துள்ளார். இலங்கையில் மோதல் காரணங்களால் நாட்டிலிருந்து வெளியேறியமைக்கான ஐ.நா சபையின் ஆவணங்களை அவர்கள் தம்வசம் வைத்திருப்பதாகவும் செல்வராஜா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முல்லைத்தீவில் முதன்முறையாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகிறது -அரசஅதிபர் எமில்டா சுகுமார்
Next post இரணைப்பாலையில் விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் 2மீட்பு