இரணைப்பாலையில் விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் 2மீட்பு

Read Time:1 Minute, 48 Second

இரணைப்பாலையில் விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் 2மீட்பு
புலிகள் பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஏவுகணைகளான 2சேம்மிசைல்களை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியிருப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 8வது செயலணியின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு இரணைப்பாலையிலிருந்து இந்த இரு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் புலிகள் தம்மிடமிருந்த அதிசக்திவாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டு கடந்த காலங்களில் விமானப்படையினரின் விமானங்களை இலக்கு வைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அப்பகுதியிலிருந்து எம்.பி.எம்.ஜி உள்ளடக்கப்பட்ட ஒரு பீப்பாயும் 240 லீற்றர் மண்ணென்ணெய் கொண்ட 10பீப்பாய்களும் பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளும் இராணுவத்தினர் 8வது படைப்பிரிவினரின் தளபதியான ரவிப்பிரியலியனகே தலைமையிலான புலனாய்வுப்பிரிவு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “இரணைப்பாலையில் விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் 2மீட்பு

  1. அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் கடந்த வருடம் பரவிய காட்டுத்தீயில் எழுநூறு ஆமாம் ஆக எழுநூறு குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். இவர்களில் ஒரு சிலரை தவிர பெரும்பான்மையான குடும்பங்கள் இன்னமும் இடம்பெயந்தவர்களாகவே தற்காலிக இடங்களில் வாழ்ந்து வருகின்றனர் . அவுஸ்திரேலிய அரசாலோ விக்டோரியா மாகாண அரசாலோ அல்லது காப்புறுதி நிறுவனங்காலேயோ இவர்களை இன்னமும் மீளக் குடியமர்த்த முடியவில்லை.
    நாலு வருடத்திற்கு முன் கத்ரீனா என்ற புயல்காற்றில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநில மக்களில் இன்னமும் பல ஆயிரக்கணக்கானோர் இடம்பெயந்த தற்காலிக இடங்களிலேதான் வசித்து வருகின்றனர். இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு எப்போது திரும்பலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

    உலக வரலாற்றிலேயே இவ்வளவு தொகையாக இடம்பெயந்த மக்களை உள்நாட்டில் வைத்து பராமரித்த சம்பவம் இலங்கையில்தான் நடந்துள்ளது. அத்துடன் இவ்வளவு விரைவாக இடம் பெயந்தவர்களை மீளக் குடியேற்றி வருவதும் இதுவரை உலகில் வேறு எங்கும் நடைபெறவில்லை.
    மீளக் குடியேற்றுவதில் இலங்கை அரசு இன்னமும் துரிதமாக செய்ய முடியாமல் இருப்பதற்கு முக்கிய மூன்று காரணங்கள்
    ஆயிரக்கணக்கான புலிகள் இடம்பெயந்த மக்கள் மத்தியில் ஒளிந்திருப்பது.
    மீளக் குடியேறக்கூடிய இடங்களில் மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் இன்னமும் புதைந்திருப்பது
    இன்னமும் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணைகள் தற்கொலை அங்கிகள் ஆயத்தங்கள் மீளக் குடியேற்ற வேண்டிய இடங்களில் இருந்து கண்டு பிடித்து எடுக்க வேண்டியிருப்பது

    கடந்த ஐந்து மாதமாக குண்டு வெடித்தோ பதுங்கு குளிகளிலோ நூற்றுகணக்கானோர் தினசரி இறந்து போவது முற்றாக நின்றுவிட்டது.
    அனைவரும் மீளக் குடியேற இன்னமும் நாலு மாதம் எடுக்கும்.
    இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறிய பின் அத்தனை தமிழ்ஈழ ஊடகங்களும் தமிழக சினிமாவை நோக்கி நகர வேண்டியதுதான்

Leave a Reply

Previous post மலேசியாவின் தடுப்புமுகாமிலுள்ள ஆறு இலங்கையர்கள் உண்ணாவிரதம்
Next post பா.நடேசன், புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்தவேளை கொலை செய்யப்பட்டது உண்மையே -பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி