நடிகர் மம்முட்டி எம்.பி. ஆகிறார்: மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு சார்பில் நிறுத்தப்படுகிறார்

Read Time:2 Minute, 1 Second

mammoty.jpgபிரபல நடிகர் மம்முட்டி, மலையாள பட உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். மலையாளம் மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில் தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்தார். அழகன், மவுனம் சம்மதம், மக்களாட்சி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் உள்பட ஏராள மான படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் நடித்து புகழ் பெற்றிருந்தாலும் அரசியலில் ஆர்வம் கட்டாமல் ஒதுங்கியே இருந் தார். தற்போது மம்முட்டியை டெல்லி மேல்சபை எம்.பி.யாக்க மார்க் சிஸ்ட் கம்ïனிஸ்டு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்சபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 2 எம்.பி.க்கள் பதவி காலம் விரைவில் முடி வடைய இருக்கிறது. அந்த இடங்களுக்கு யாரை எம்.பி. யாக நியமிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட் டது.

இந்த கூட்டத்தில் டெல்லி மேல்சபை தேர்தலில் கலைத் துறை சார்பில் ஒருவரை தேர்ந்து எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அப்போது நடிகர் மம்முட்டியை மேல்சபை எம்.பி.யாக்க வேண்டும் என்று நிர்வாகிகள் பலர் யோசனை தெரிவித்தனர்.

மற்றொரு இடத்துக்கு கம்ïனிஸ்டு கட்சியின் ஒரு பிரிவான அகில இந்திய மாணவர் பேரவை பொது செயலாளர் கே.கே. ராகேஷ் நிறுத்தப்படுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பியோடிய புலிச்சந்தேக நபர்கள்
Next post சீனாவில் விமானம் விழுந்து நொறுங்கி 40 ராணுவ வீரர்கள் பலி