சர்வதேச கடனட்டை சூத்திரதாரி “கனடா உமேஸ்” சென்னையில் கைது

Read Time:2 Minute, 32 Second

சர்வதேச ரீதியாக கடனட்டை மோசடியில் ஈடுபட்டுவந்த குழு ஒன்றின் பிரதான சூத்திரதாரி என தெரிவிக்கப்பட்டு இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் இருந்து பாரிய போலி கடனட்டை தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பெரம்பத்தூர் பகுதியில் போலி கடனட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முற்பட்டவேளையிலேயே செம்பியம் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் ஹரிக்குமார் என அடையாளப் படுத்தப்பட்டுள்ள அவர் கடந்த 15ம் திகதி கைதானார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து இந்த போலி கடனட்டை மோசடி குழுவின் தலைவர் உமேஸ் எனவும் அவர் கனடாவில் வசிப்பதாகவும் தற்சமயம் சென்னையில் உள்ள போரூர் பகுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது ஹரிக்குமாரிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்ட பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றவியல் புலனாய்வுப்பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தமிழகச்செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மோசடிக்குழுவின் தலைவர் என தெரிவிக்கப்படும் உமேஸின் வீட்டை விஷேட காவல்துறைகுழுவொன்று சுற்றிவளைத்து கைது செய்தது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அவர் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முகவர்களை நியமித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் அவர் தமிழகத்தில் மாத்திரம் 50லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டுள்ளதுடன் பல்வேறு நாடுகளில் 1லட்சத்து 50போலி கடனட்டைகள் பயன்படுத்தியிருப்பதாகவும் காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் தொகுதிதொகுதியாக அழைத்துச்செல்லப்பட்டு பாடசாலைகளில் தங்கவைப்பு
Next post இராணுவஅதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை -இலங்கை அரசாங்கம் அறிவிப்பு