பிரபாகரனை பிடித்து பின்னர் கொல்லவில்லை- இலங்கை மறுப்பு

Read Time:2 Minute, 33 Second

lttepiraba-deadbodyவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் அவரை படுகொலை செய்ததாக வெளியாகியுள்ள செய்தியை இலங்கை மறுத்துள்ளது. கடந்த மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை தெரிவித்தது. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீலங்கா கார்டியன் என்ற இணையதளம் புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிரபாகரன் ராணுவத்திடம் சரணடைந்தார். அதன் பின்னர் அவரை ராணுவம் சித்திரவதை செய்து பின்னர் படுகொலை செய்தது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. போரின் கடைசி கட்டத்தின்போது தப்பி நாட்டை விட்டே வெளியேறிய பிரபாகரனின் மெய்க்காவலர் ஒருவர் கூறிய தகவல், இலங்கை உளவுப் பிரிவிலிருந்து சேகரித்த தகவல், பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல் ஆகிய மூன்று தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிடுவதாக கார்டியன் கூறியுள்ளது. ஆனால் இதை இலங்கை பாதுகாப்புத்துறை மறுத்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்தை போர்க் குற்ற நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த நடத்தப்படும் சதி வேலைகள் இவை. இது வெறும் கட்டுக்கதையே. ராணுவத்தின் மூத்த அதிகாரிகளின் கெளரவத்தைக் குலைக்கும் செயல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில், அந்த நாட்டு வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், போரின் கடைசிக் கட்டத்தின்போது, புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சரணடைய முன்வந்து பாதுகாப்புப் படையினரை அணுகினர். ஆனால் அவர்களை ராணுவம் கொலை செய்து விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

12 thoughts on “பிரபாகரனை பிடித்து பின்னர் கொல்லவில்லை- இலங்கை மறுப்பு

  1. பிரபாகனுக்கு ராஜபக்சே கொடுத்த அறுபது கோடி ரூபாய்களும் இருநூறு வள்ளங்களும் தான் பிரபாகரனுக்கு ராஜபக்சே போட்ட வாய்க்கரிசி

  2. ஈழவெறியில் வெள்ளி பார்த்து கொண்டிருந்த எங்களால் முள்ளி வாய்க்காலில் நாங்கள் எப்படியும் தன்னை காப்பாற்றுவோம் வெள்ளி பார்த்து கொண்டிருந்த வெற்று தலைவனையும் இழந்து ஈழத்தையும் இழந்து நிற்கிறோம்.
    இன வெறியில் வீதியில் நின்று கூச்சல் போட்டால் முள்ளி வாய்க்காலில் வெள்ளி பார்த்துக்கொண்டிருந்த தலைவனை வெளியில் கொண்டு வரலாம் என்று வெற்று தலையர் நாங்கள் நம்பினோம்.
    எங்களை இன்னமும் வெள்ளி பார்க்க விடுங்கோ உள்ளதுகளை உண்மைகளை ஒருக்காலும் சொல்லவேண்டாம். எங்களுக்கும் உள்ளதுகள் தெரிய வேண்

  3. எத்தனை முறை இறந்தாலும் எம் தேசியத் தலைவர் இதுவரை உயிர்த்து
    எழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும்”.

    “இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை,சந்ததிக்குள்ளே
    உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி “

  4. இவன் போன்றவங்களை சரணடைந்திருந்தாலும் கோடாலியால் கொத்தியது தப்பில்லை , நானாக இருந்தால் இவன்ர கழுத்தை கடித்திருபேன். இவன் போன்றோரும் இவன் கூட்டத்துக்கு வெளிநாட்டு ஆதரவானவர்களும் திருந்த விட்டால் கரல் பிடித்த கோடாலி இரத்த வாசனையுடன் காத்திருக்கின்றது.

  5. எத்தனை முறை இறந்தாலும் எம் தேசியத் தலைவர் இதுவரை உயிர்த்து
    எழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும்”.

    “இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை,சந்ததிக்குள்ளே
    உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி “

  6. நாங்கள் எல்லோரும் இலங்கைதீவில் இருக்கிறோம். இதில் எத்தனை பேர் இலங்கைதீவை நேசித்தோம்??? கட்சியின் போக்குகள் எப்படியிருந்தாலும் இரு பெரியகட்சிகளான ஐக்கியதேசிய கட்சியும் சிறீலங்கா சுகந்திரகட்சியும் தமது கட்சியின் பெயருக்கு முன்னால் தமது இனத்தின் பெயரை சேர்த்ததுண்டா?

    கடந்தகால அரசியல் தமிழ்தலைமைகள். இலங்கைதீவில் எமது இனத்தின் பெயரை நாம்வைத்துக் கொண்டு நாமே பிரிவினைக்கு வித்திட்டுகொண்டு உரிமை தா? என்றால் என்றால் என்ன அர்த்தம்???
    ஆயிரம் வருடம் வாழ்ந்த தமிழ்மூஸ்லீங்களை சிங்கள பகுதிக்கு விரட்டிவிட்ட அனுபவமமல்லவா பதிவாகியிருக்கிறது.
    நாளைக்கு தமிழ் சிறுபான்மைத் தமிழரையும் மலையகத்தமிழரையும் துரத்திவிடமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

    புலியையும் பிரபாகரனையும் காப்பதற்கு லட்சக்கணக்கில் ஊர்வலம்போன நீங்கள் மூஸ்லீம் மக்களுக்காகவோ சிலபத்து வருடங்களுக்காகவே சிதைந்துபோன வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிற முப்பதினாயிரம் மீனவக் குடும்பத்திற்காக மலையக மக்களின் பொருளாதார வாழ்வுவை உயர்த்துவதற்காக ஊர்வலமோ அல்லது ஒருகூட்டத்தை நடத்தியதுண்டா?

    நான் திருந்தமாட்டேன் நான் அயல்சமூகத்தை நேசிக்கமாட்டேன். இலங்கைத்தீவில் பக்தி கொண்டிருக்க மாட்டேன். தமிழருக்கு உரியதை தா என்று கேட்டால் இது இனத்தில் கொண்ட பற்றால் அல்ல

    சிறுபகுறிப்பு.
    ஈழம் என்றாலும் இலங்கை. சிங்களம் என்றாலும் இலங்கை.

    நண்பர் சந்திரன் ராஜா சொன்ன கருத்துக்கள் இவை

  7. வெள்ளிபார்த்த வெங்காயதலையனுடன் இருப்பதை விட வெடிகுண்டை கட்டி கொண்டு தற்கொலை செய்வது மேல் என்றுதான் பல உண்மையான விடுதலைப் புலிகள் வீரமரணம் அடைந்தார்கள்

  8. யாரிந்த கு.பிசாசு? இவ்வளவுநாளும் ஏங்கே தலையை புதைத்து வைத்துக்கொண்டிருந்து? தமிழனா பிரச்சனையை தேடிப்போனான்? இது சிங்களவனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தமிழ்மண்ணில் பிறந்த எந்தக் குழந்தையும் அறியும். மூட்டைப்பூச்சியை கொல்ல வீட்டைக், கொழுத்தினது போல் தான் வன்னிச்சமர். இதேபோல சிங்களச்சனம் வன்னிச்சமருக்குள் அகப்பட்டிருந்தால் சிங்களராணுவம் மக்களையும் பாராமல் அடித்திருப்பானா சொல் குக…பிசாசே? !இராணுவம் என்றால் என்ன? நாட்டையும் நாட்டுமக்களையும் காப்பாற்ற தன்உயிரை கொடுப்பான். ஆனால் இங்கு நடந்தது என்ன? சிங்களஇராணுவம் தங்களை காப்பாற்ற மக்களை பலிகொடுத்தார்கள்.

    இந்த விறைச்சமண்டையனின் பி–,பெ—– கற்பழித்து கொலை செய்யவேண்டும்.(மன்னிக்கவேண்டும் அப்படி எங்கள் எதிரிக்குக்கூடநடக்கக்கூடாது))

  9. பிடித்து கொன்றால் என்ன பிடிக்காமல் கொன்றால் என்ன,,,தம்பி மாரே இது தேவையா?
    நடந்ததை கிளறாமல் நடப்பவற்றை பார்ப்போம்….
    யாழ் மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்… அது போதும்… யார் செத்தால் என்ன….
    இது தெரியுமோ??? யாழ்ப்பாணத்தில கொழும்பை விட பொருட்களின் விலை குறைவாம்…..
    சில புள்ளிகளின் கொள்ளை லாப வியாபாரம் படுத்து விட்டதாம்… இவையள் தான் தலைவர் வருவார், தமிழ் ஈழம் பிடுத்து தருவார் என்று ஊளையிட்டு கொண்டு இருக்கினம்,

    சுயநலத்துக்காக தமிழரை இருண்ட இடத்தில் வைத்திருந்தது போதும்….
    புலம் பெயர் தமிழர் சுவாசிக்கும் சுதந்திர காற்றை இப்போ இலங்கை தமிழரும் சுவாசிக்கட்டும்…..

    இலங்கையில் வாழும் தமிழரிடம் ஒரு கணக்கு எடுப்பு நடத்துங்கள்…. தமிழ் ஈழம் வேண்டுமா என்று… பின்னர் புரியும்..யாருக்கு அது வேண்டும் என்று… அதன் பின்னணியும் புரியும்…..

  10. தமிழர்கள் ஏன் ஒன்றுபடவில்லை எனக் கவலைப்படுகிறீர்கள்
    வவுனியாவில் உள்ள முகாமில் ஒன்றுபட்டுத்தானே இருக்கிறார்கள்…
    அதைக் கூட உங்களுக்குப் பிடிக்காமல்…
    தமிழ்மக்களை “வெளியில்விடு” என சர்வதேச அரங்கில் கூவுவது ஏனென்றுதான் புரியவில்லை!

Leave a Reply

Previous post இராணுவஅதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை -இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
Next post வெள்ளவத்தையின் பாமன்கடை பகுதி வீடொன்றுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு