கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜசீகரனும் மனைவியும் விடுதலை

Read Time:1 Minute, 31 Second

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜசீகரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் இன்றுபிற்பகல் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரபல ஊடகவிலாளரும் 20 வருட கடூழிய சிறைக்குட்பட்டவருமான திஸ்ஸநாயகம் வெளியிட்ட நோர்த் ஈஸ்ட்டர்ன் கரல்ட் என்ற சஞ்சிகையின் வெளியீட்டாளராகவும் அந்த அச்சகத்தின் உரிமையாளராகவும் விளங்கிய ஜசீகரனும் அவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல சித்திரவதைகளுக்கு உள்ளாகியதாக அடிப்படை மனித உரிமைகள் வழக்கை தாக்கல் செய்திருந்தார்கள். இந்நிலையில் இந்த வழக்கை வாபஸ்பெற்றால் அவர்களை விடுவிக்கலாம் என அரசதரப்பினர் சட்டமா அதிபரூடாக நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து இரு தரப்pனரும் சுமுகமாகப் பேசி முடிவுக்கு வருமாறு நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.நாவின் அமைதிகாக்கும் பணிகளுக்கு அதிக படைவீரர்களை அனுப்ப முடியும் -இலங்கை அரசாங்கம்
Next post மலேசியாவில் பாலம் இடிந்தது- 22 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி பலி