இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக ஆஸிசென்ற 260அகதிகள் தமது படகை எறியூட்டப் போவதாக எச்சரித்துள்ளனர்.

Read Time:2 Minute, 8 Second

இந்தோனேசியாவில் படகுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 இலங்கை தமிழர்களும் தாம் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கு அனுமதிக்கப்படா விட்டால் தமது படகை எறியூட்டப் போவதாக எச்சரித்துள்ளனர். இவர்கள் தற்போது பான்டெனில் உள்ள மெரக் துறைமுகத்தில் இந்தோனேசிய அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மாகாண மனிதஉரிமைகள் அமைப்பின் அலுவலக பிரதானி பொப்பி பட்ஜேயாஸ்வடி இந்த அகதிகள் கோபமடைந்துள்ளதாகவும் எனவே படகை எரியூட்டப் போவதாகவும் எச்சரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் இந்த அகதிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 11ம் திகதியன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துக் கொண்டிருக்கையில் இந்தோனேசிய அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டனர் இதன்பின்னர் தம்மை கைது செய்வதற்கு இவர்கள் மறுத்ததை அடுத்து மெரக் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு படகிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றம் ஏனைய உதவிகளை சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பும் துறைமுக அதிகாரிகளும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் அகதிகள் படகில் இருந்து வெளியேறினால் அவர்களுக்கு உணவும் தங்குமிட வசதிகளையும் தாம் வழங்க முடியும் என மனிதஉரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது இந்நிலையில் அவர்கள் நெரிசலில் உள்ளதன் காரணமாக அகதிகள் மத்தியில் தோல்நோய் பரவியுள்ளதாக பான்டெனில் உள்ள சுகாதார தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக ஆஸிசென்ற 260அகதிகள் தமது படகை எறியூட்டப் போவதாக எச்சரித்துள்ளனர்.

  1. உண்மையாக யுத்தத்தில் பாதிக்கப்பட்டவரை அகதியாக உள்வாங்கி கொண்டு மத்தவரை திருப்பி அனுப்புவதே சிறந்தது…..

    இது தெரியுமோ?
    சுனாமி காலத்தில், கொழும்பில் செல்வந்தர் பகுதிகளில் வாழும் சிலரும் சுனாமியால் பாதிக்கப்பட்டதாக சொல்லி விசாவும் பெற்று வெளிநாடு வந்தது தான் நினைவில் வருகிறது…………………..

    முகவர்களிடம் இவ்வளவு பணம் கொடுத்து, உண்மையில் யுத்தத்தால் பாதிக்கப் பட்டவர் வந்திருப்பது சிறிது நம்ப இயலாவிட்டாலும்….உலக நாடுகள் தமிழரை உள்வாங்கி கொள்ள வேண்டும்………

    ஆனால் ஒன்று…விசா கொடுக்கும் போதே சொல்லி விடுங்கள்… வி வான்ட் தமிழ் ஈழம் அவர் லேடர் பிரபாகரன் எண்டு இங்க வந்து கூச்சல் போடா கூடாதென்று…

Leave a Reply

Previous post கோவை மாநாட்டில் சிவத்தம்பியும் பங்கேற்கிறார் -கருணாநிதி
Next post பிள்ளையானின் பாதுகாப்பு வகனம் மோதியதில் மூவர் பலி