உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த புலி உறுப்பினர் கைது

Read Time:1 Minute, 44 Second

பாதுகாப்புப் பிரிவினருக்கு உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக தெரிவித்து பொலிசாருடன் இணைந்து செயற்பட்ட இந்நபர், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிவனேசராஜா வினோத்குமார் என்ற நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினர், இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளில் குறித்த நபர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த குறித்தநபர் தாமாகவே புலிகள் பற்றிய தகவல்களை வழங்குவதாக தெரிவித்துப் பொலிஸாரிடம் சரணடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இவர் வழங்கிய உளவுத்தகவல்கள் போலியானவை எனப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். சிங்களவர் ஒருவரைப் போன்று நடித்து இவர் தெற்கில் தகவல்களைத் திரட்டியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கத்தை சுமக்கும் மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.!
Next post அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராஜரட்னத்திடம் விசாரணை செய்ய இலங்கைக்குழு அமெரிக்கா செல்ல தீர்மானம்