தங்கம் கடத்திச்சென்ற இலங்கையர்கள் இருவர் சென்னைவிமான நிலையத்தில் கைது

Read Time:2 Minute, 30 Second

கொழும்பில் இருந்து சென்னைக்கு கடந்திவரப்பட்ட 67பவுண் தங்கநகைகளை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் இதுதொடர்பில் இலங்கை பெண் உள்ளிட்ட 2பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து ஒருவிமானம் சென்றுள்ளது அதில் வந்தவர்களை விமான நிலைய சுங்கஅதிகாரிகள் கண்காணித்துள்ளனர் அப்போது இலங்கை யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த சுந்தரம் வயது37 என்பவரிடம் சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள் அப்போது சுந்தரம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார் இதையடுத்து அவரிடம் இருந்த சூட்கேஸை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் எதுவும் இருக்கவில்லை சுந்தரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது கழுத்தில் புத்தம் புதிய 40பவுண் எடைகொண்ட தங்கச்சங்கிலி அணிந்து இருந்தார் இதுபற்றி கேட்டபோது சுற்றுலாவாக சென்னைக்கு வந்தேன் இந்த தங்கச்சங்கிலியை கழுத்தில் அணிந்துக்கொண்டு விமான நிலையத்தில் உள்ள ஒரு நபரிடம் பணம்தருவதாக கூறினார்கள் இதனால் எடுத்துவந்தேன் என்றார் மேலும் அதேவிமானத்தில் வந்த யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தர்ஷினி (வயது35) என்ற பெண்கைகளில் அதிகமான வளையல்களை அணிந்து வந்திருந்தார் சுமார் 27பவுண் தங்கவளையல்களை இவர் கடத்திவந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மொத்தம் 67பவுண் மதிப்புள்ள சங்கிலி வளையல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் இவற்றின் மதிப்பு 8லட்சம் ரூபாவாகும் இதுதொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் சுங்கஅதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை அகதிகளை ஏற்க அவுஸ்திரேலியா மறுப்பு இந்தோனேசிய முகாமில் தடுத்து வைக்க முயற்சி
Next post 1900புலி உறுப்பினர்கள் இடம்பெயர் முகாம்களில் இருந்து கைது