யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வுக்கான ஆரம்ப வரவேற்பு வைபவத்தை புறக்கணித்த தமிழ்க்கூட்டமைப்பினர்

Read Time:2 Minute, 59 Second

யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வுக்கு முன்னதாக நேற்று நடைபெற்ற ஆரம்ப வரவேற்பு வைபவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பான உறுப்பினர்கள் 9பேரும் புறக்கணித்துள்ளனர்; நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. நல்லூர் கந்தசுவாமி கோயிலிருந்து யாழ். மாநகரசபை வளாகம்வரை கோலாகலமாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் சேர்ந்த 8 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவருமாக புறக்கணித்தனர். அந்த நிகழ்வு நடைபெறும்வரை மாநகரசபை வளாகத்தில் உள்ள தீயணைப்புப் பிரிவு முன்றிலில் அமர்ந்திருந்தனர். வரவேற்பு நிகழ்வை புறக்கணித்தது குறித்து தமிழரசுக் கட்சியின் தலைமை உறுப்பினர் மு.றெமிடியஸ் கருத்துரைக்கையில், எமது மக்கள் முகாம்களிலும் அதற்கு வெளியிலும் சொல்லொணாத்துன்பங்களை தொடர்ச்சியாக அனுபவித்து வரும் நிலைமையில் நாம் ஆடம்பர நிகழ்வுகளை முற்றாகத் தவிர்த்து வருகிறோம். இன்று மக்களின் துன்பங்களை நாம் புரிந்து கொண்டு ஆடம்பரமான பகட்டான நிகழ்வுகள் எதிலும் நாம் பங்கேற்றுக் கொள்வதில்லை. ஏன் எமது மாநகரசபை உறுப்பினர் பதவியேற்பு நிகழ்வினையே மிக எளிய முறையிலேயே நடத்தினோம். ஜனநாயக நாட்டில் நல்லாட்சி நடக்க வேண்டும் எனில் அவரவர் தனக்குரிய பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சி கோட்பாட்டிற்குக் முறணாக நடத்துகொள்ளும் நிகழ்வு இது. இங்கு நடப்பது ஓர் அரசியல் பிரசாரமே. அரசியல் பிரசாரக் கூட்டத்திற்கு நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை. அது மட்டுமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் எவரும் இந்த வரவேற்பு நிகழ்வுக்கு அழைக்கப்படவும் இல்லை பத்மினி சிதம்பரநாதன், சொலமன் சிறில் ஆகியோர் மாநகரசபை பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிகழ்வுக்கு சம்பந்தமற்றவர்கள் இந்நிகழ்வினை அரசியல் பிரசார யுத்திக்கான மேடையாக பயன்படுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “யாழ் மாநகர சபையின் முதலாவது அமர்வுக்கான ஆரம்ப வரவேற்பு வைபவத்தை புறக்கணித்த தமிழ்க்கூட்டமைப்பினர்

  1. தமிழ் கூட்டமைப்பினர் தமிழ்மக்கள் எல்லாம் முட்டாள்கள் என நினத்துக்கொண்டு அறிக்கைவிட்ட கேவலம் இது.
    மேடை மேடையாக ஈபிடிபியினரைத் தூற்றிய; யாழ் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட தோழர் மு.றெமிடியஸ் டக்ளஸ் தேவானந்தாவிற்குக் கைலாகு கொடுத்து கதைத்ததை என்னவென்று சொல்வது.
    மானங்கெட்ட தமிழ்கூட்டமைப்பு இனியும் வாழணுமா?

Leave a Reply

Previous post சிம்காட்டை கைப்பற்ற முனைந்தபோது அதைக்கடித்த கடற்புலி சந்தேகநபர் கைது
Next post மாட்டிக் கொண்ட சிவத்தம்பி!-படைப்பாளிகள்