புலிகளுக்கு உதவியதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு

Read Time:2 Minute, 19 Second

விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக நால்வருக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் இலங்கை சுங்கவரித்துறை மேலதிக இயக்குனரான இந்திரா சரத் பாலசூரிய மற்றும் கப்பற்றுறையில் ஏற்றுமதி இறக்குமதி செய்யம் பிரிவின் நிறைவேற்று அதிகாரி ராஜேந்திரன் யோகராஜா ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் புலிகளுக்கு உதவியதோடு றோய் மனோஜ்குமார் சமாதானம் மற்றும் இவரின் மனைவி ரிட்மா ரொஷானி சிலம்பம் ஆகிய இருவரையும் புலிகளுக்கு ஒரு ஜி.பி.எஸ் சாதனத்தை 2007ம் ஆண்டு ஜூலைமாதம் 30ம் திகதியி;ல் கொண்டு வந்து கொடுத்து உதவி செய்யும்படி தூண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானம் கொடுத்த வாக்குமூலமில் தாம் இலங்கைக்கு வரும்போது கனடாவிலுள்ள இலங்கையர் ஒருவர் தம்மை விடுதலைப்புலிகளுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் அதன் பின்னர் சிங்கப்பூர் மலேசியா நாடுகளிலிருந்து தொலைத்தொடர்பு சாதனங்களை கொண்டு வந்து தருமாறு தம்மை புலிகள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிங்கப்பூரிலிருந்து முகுந்தனும் சின்னவனும் தம்மிடம் பொருட்கள் தந்துவிட்டதாகவும் தாம் அவற்றை புலிகளிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார் மேற்படி குற்றச்சாட்டில் மூன்றுபெட்டிகள் நான்குராடரர் தொகுதிகள் நான்கு ராடர் அன்டனாக்கள் மற்றும் 150வி.எச்.எப் மொமைல் தொலைபேசிகள் என்பவற்றின் உற்பத்திகளும் உள்ளடக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்தவர் யாழ்ப்பாணத்தில் கைது
Next post அழகியின் முகத்தை அலங்கோலமாக்கிய ஷில்பாவின் அழகு நிலையம்