பூந்தோட்டம் முகாமிலிருந்து மேலும் 67 மாணவ, மாணவிகள் இரத்மலானைக்கு அனுப்பிவைப்பு

Read Time:2 Minute, 33 Second

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்து மேலும் 67 மாணவ, மாணவிகள் நேற்றும் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தபோது புலிகளால் பலாத்காரமாக படைக்குச் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு மீண்டும் தங்களது கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் பூந்தோட்டம் முகாமிலிருந்து 211பேர் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 81 மாணவர்களும், 63 மாணவிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்ற முன்தினம் காலை 7.30மணிக்கு பூந்தோட்டம் முகாமிலிருந்து 23 மாணவிகளும் 44 மாணவர்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஏனைய மாணவர்கள் போன்று பல கனவுகளுடன் கல்வியை தொடர்ந்த எங்களை தாய் தகப்பனுக்கும் தெரியாமல் பலாத்காரமாக இழுத்துச் சென்று பயிற்சி வழங்கினார்கள். இன்று எமது பெற்றோரை சந்தித்தது மட்டுமல்லாமல் கல்வியைத் தொடர வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என மாணவர்கள், மாணவிகள் தெரிவித்துள்ளனர். இரத்மலானைக்கு புறப்பட இரண்டு நாட்களுக்கு முன் மிகவும் கவலையுடன் காணப்பட்ட 18வயது யுவதி தனது பெற்றோரை காணாமல் போகப் போகிறோமே என படையதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இதனைடுத்து புனர்வாழ்வு முகாமுக்கு பொறுப்பான கேர்ணல் மஞ்சுள குணசங்க பாலமோட்டையிலுள்ள அவரது பெற்றோரை அழைத்துவந்து மேற்படி யுவதிக்கு காண்பித்தார். பெற்றோரை சந்தித்த மகிழ்ச்சியுடன் கேர்ணல் குணவிங்கவின் கால்களில் ஆசீர்வாதம் பெற்று புறப்பட்டார். இரண்டு பஸ் வண்டிகளில் 67பேரும் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “பூந்தோட்டம் முகாமிலிருந்து மேலும் 67 மாணவ, மாணவிகள் இரத்மலானைக்கு அனுப்பிவைப்பு

  1. ஏன் வடபகுதியில்உள்ள கல்விக்கூடங்களின் கதவுகள் இவர்களுக்காக திறக்காதா என்ன? இந்தப்பிள்ளைகளையும் இரத்மலானைக்குக் கொண்டுபோய் என்ன செய்யப் போறாங்களோ படுபாவிகள்??

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விரிவுபடுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்வது பற்றி ஆராய்வு