By 2 November 2009 4 Comments

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விரிவுபடுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்வது பற்றி ஆராய்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விரிவுபடுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்வது குறித்து ஆராயப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பின் செயலாளர் பிரசன்னா இந்திரகுமார் விடுத்த கோரிக்கையை அடுத்து கூட்டமைப்பு அடுத்தவார நடுப்பகுதியில் கூடவுள்ளது. கூட்டமைப்பின் செயற்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளை அவர் கடிதம்மூலம் கேட்டிருந்தார். இது விடயமாக ரெலோ கட்சிப் பிரமுகரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது. தீர்க்கப்படாத இனப்பிரச்சினை, மக்களின் மீள்குடியமர்வு, யுத்தத்தின் பின்னரான புனரமைப்பு போன்றவை தமிழ்க்கட்சிகளின் முன்னுள்ள சவால்களாகும். இச் சவால்களை தமிழ்க்கட்சிகள் ஒன்று சேந்து சந்திக்க சகலரும் ஒன்றிணையவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டு, நடை பெறவிருக்கும் கூட்டத்தில், தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படவுள்ளது. அத்துடன் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா) ஆகியவற்றையும் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள் இணைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்படும். தமிழ் மக்களின் இன்றைய தேவையை கருத்தில் கொண்டு கூட்டமைப்பை ஏழு கட்சிகள் கொண்டதாக விஸ்தரிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இது தொடர்பாக கூட்டமைப்பின் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும். சகல தமிழ்க் கட்சிகளையும் இணைத்துக்கொள்ளும் வகையில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியையை இணைத்துக் கொள்ளலாம். அரசுடன் இணைந்துள்ள தமிழ்கட்சிகள் முன்வந்தால் அவற்றையும் கூட்டமைப்பில் இணைப்பது குறித்து ஆலோசிக் கலாம். தமிழ்க் கூட்டமைப்பை இளைஞர்கள் அங்கம் வகிக்கும் கட்சியாக மாற்றம் செய்து புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க சகலரும் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.4 Comments on "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விரிவுபடுத்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்வது பற்றி ஆராய்வு"

Trackback | Comments RSS Feed

 1. நக்கீரன் says:

  தமிழ் தேசிய கூத்தமைப்பினரை கைது செய்து தகுந்த தண்டனை தர வேண்டும்,

  தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கமான புலிகளை ஆதரிந்தும் பயங்கரவாதிகளின் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியும் இவர்கள் தாமும் ஒரு பயங்கரவாதிகள் என்று நிரூபித்து விட்டார்கள்…

  இவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசு ஆவன செய்ய வேண்டும். இலங்கை தமிழராகிய நாங்கள் இதற்கு முழு ஆதரவு தருவோம்..

 2. ஒட்டக்கூத்தன் says:

  அரசியலில அடுத்த அன்ரன் பாலசிங்கம் தான் என்று ஸ்ரீகாந்தாவுக்கு நினைப்பு… அடுத்த அன்ரன் பாலசிங்கம் எண்டது உண்மைதான்… ஆனால், அரசியல்ல இல்லை… வெறியில! வெறிக்குட்டி என்னதான் சட்டம் படித்திருந்தாலும் வெறிக்குட்டி, வெறிக்குட்டிதான்!
  தலைவர் ஸ்ரீ அண்ணா சாகும்போதும் ஸ்ரீகாந்தா மப்பிலதானே இருந்தவன்.
  வெறிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு… அதுபோல புலியோடு விடிஞ்சுது… அரசோடு சேருது!
  என்ன காந்தா… இனியும் தமிழருக்கு உதவிசெய்யும் எண்ணமிருக்கோ?

 3. சாமி says:

  தமிழ்ப் பெயரை சூட்டிக்கொண்டவர் அனைவரும் தமிழராகமுடியாது. சிங்ளவன் போடும் எலும்பைகூட தமிழர்வீட்டு நாய் திரும்பிப்பாராது.

  ஜே வி பி போராளிகள் கூட சக சிறீலங்கா இராணுவத்தால் உயிருடன் ரயர்போட்டு எரிக்கப்பட்டார்கள். ஆனால் சிங்கள இனத்துக்கு ஒருபிரச்சினை வரும்போது அனைத்தையும் மறந்து ஒன்றாகக் குரல்கொடுக்கிறார்கள். இங்கேயும் சில கேவலங்கள்……..சீ……..தூ……

 4. ஒட்டக்கூத்தன் says:

  இன்னா சாமி… ஓம் மூஞ்சேலை நீயே காறி துப்றியே! சொம்மா தொடச்சுக்கோ!

Post a Comment

Protected by WP Anti Spam