கோதபயாவுக்கு எதிரான பொன்சேகாவிடம் சாட்சியம் கோரும் யுஎஸ்

Read Time:4 Minute, 39 Second

இலங்கையில் நடந்து முடிந்த ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் கோதபயா ராஜபக்சேவுக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகாவை கேட்டுள்ளது அமெரிக்க அரசு. தற்போது சரத் பொன்சேகா அமெரிக்கா வந்துள்ளார். தனது கிரீன் கார்டு காலாவதியாகி விடாமல் காப்பாற்றுவதற்காக அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் கோதபயாவுக்கு எதிரான சாட்சியத்தை வழங்குமாறு பொன்சேகாவிடம் அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அட்டூழியங்கள், போர்க் குற்றங்கள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கற்பழிப்புகள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களிலும் கோதபயாவுக்கு உள்ள பங்குகள் குறித்த ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் அளிக்குமாறு பொன்சேகாவை அது கேட்டுக் கொண்டுள்ளது. பொன்சேகாவிடம் அமெரிக்க அரசு இவ்வாறு கேட்டுக் கொண்டிருப்பது உண்மை தான் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்று வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா இலங்கை அரசின் கருத்தை தெரிவிக்கவுள்ளதாகவும் அது கூறியுள்ளது. தனக்கு அமெரிக்க அரசு விடுத்துள்ள கோரிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் பொன்சேகா. தற்போது பொன்சேகா ஓக்லகாமா நகரில் தனது மகள் வீட்டில் தங்கியுள்ளார். அவரது மருமகன் தொலைபேசி மூலம் பொன்சேகாவைத் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிகாரிகள், கோதபயாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனராம். தன்னிடம் அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை அப்படியே கடிதம் மூலம் இலங்கை தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளார் பொன்சேகா. முன்னதாக அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் பொன்சேகாவை விசாரிக்கவுள்ளதாகம், இதற்காக அவரை உள்துறை அமைச்சக விசாரணை அலுவலகத்திற்கு அழைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சியும், பீதியும் அடைந்தது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்துவதாக அது சந்தேகமடைந்துள்ளது. கடந்த அக்டோபர் 22ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், நாடாளுமன்றத்தில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பா அறிக்கையை தாக்கல் செய்தது என்பது நினைவிருக்கலாம். அதில் கோதபயா ராஜபக்சே, சரத் பொன்சேகா உள்ளிட்டோர் போர்க் குற்றம் புரிந்ததற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கோதபயா ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். பொன்சேகா விரைவில் அமெரிக்க குடியுரிமையைப் பெறப் போகிறார். இந்த நிலையில் கோதபயாவை அமெரிக்கா குறி வைத்திருப்பதும், அதற்கு பொன்சேகாவை சாட்சிக்கு அழைப்பதும், ராஜபக்சே சகோதரர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகில இலங்கை தமிழ் கட்டுறைப் போட்டியில் புலிகளின் முன்னாள் போராளிகள் இருவர் முதல் இடங்கள்
Next post அமெரிக்காவிடமிருந்து ‘தப்ப’ ராஜபக்சே தீவிரம்!..