புலமைப்பரிசில் பரீட்சை வவுனியா தடுப்புமுகாம்களிலிருந்து வன்னிமாணவர்கள் 175புள்ளிகள் பெற்று சாதனை!

Read Time:1 Minute, 58 Second

வவுனியா தடுப்புமுகாம்களிலிருந்து தரம் 5புலமைப்பரீச்சைக்கு தோற்றிய 5473பேரில் 507பேர் சித்தியடைந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கதிர்காமர் அருணாசலம் முகாம்கள் உட்பட பத்து இடைத்தங்கல் முகாம்களில் இருந்து இம்மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றினர். அவற்றின் பெறுபேறுகள் நேற்று அந்த முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 196 மாணவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 267மாணவர்களும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 27மாணவர்களும் யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த 7மாணவர்களும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 10மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். இதில் வவுனியா மாவட்டத்தில் ஆகக்கூடிய புள்ளியாக 135 புள்ளியையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 175 புள்ளியையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 175 புள்ளியையும் மன்னார் மாவட்டத்தில் 134 புள்ளியையும் யாழ்மாவட்டத்தில் 135 புள்ளியையும் பெற்று தலா ஒவ்வொரு மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். வவுனியா நிவாரண கிராமங்களில் இப்பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளியாக 111 புள்ளி என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை நீதிபதிகள் அவுஸ்திரேலியா ஊடாக பிஜி செல்ல விஸா அனுமதி மறுப்பு
Next post வவுனியா வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.. புளொட் தலைவர், த.தே.கூட்டமைப்பு பா.உ. கிசோர் ஆகியோரும் பங்கேற்று உரை