எச்சரிக்கைப் பட்டியலில் பார்வதி அம்மாள் பெயர் இருந்ததால் அனுமதிக்கவில்லை- குடியேற்றப் பிரிவு

Read Time:2 Minute, 19 Second

இலங்கையின் புதிய எதிர்கட்சி கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கியதேசியகட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியே இலங்கையின் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உடன்படிக்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிது ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்.

பார்வதி அம்மாளுக்கு விசா தரப்பட்டிருப்பதால், உள்துறை அமைச்சகத்திடம், மலேசிய இந்தியத் தூதரகம் ஆலோசித்திருக்க வேண்டும் என்று கருத வேண்டியுள்ளது.

அப்படி இருந்தால், ஏன் சென்னைக்கு வந்த பார்வதி அம்மாளை இறங்க அனுமதிக்காமல் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்கள் என்று புரியவில்லை.

இதுகுறித்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், பார்வதி அம்மாளும், வேலுப்பிள்ளையும் 2003ம் ஆண்டு வரை திருச்சியில் தங்கியிருந்தனர். பின்னர் கொழும்பு திரும்பி விட்டனர்.

அதைத் தொடர்ந்து இருவரையும் மீண்டும் இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டாம் என அப்போதைய தமிழக அரசு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இதையடுத்து இருவரும் இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்த இந்திய அரசு அவர்களின் பெயர்களை எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்தது. இன்று வரை பார்வதி அம்மாளின் பெயர் எச்சரிக்கைப் பட்டியலில் நீடிக்கிறது. இதன் பேரிலேயே அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறுகின்றனர்.

2003ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

0 thoughts on “எச்சரிக்கைப் பட்டியலில் பார்வதி அம்மாள் பெயர் இருந்ததால் அனுமதிக்கவில்லை- குடியேற்றப் பிரிவு

  1. ஐந்து மாதத்துக்கு முன் புலிவாலை பிடித்திருந்த மணி கணேசன் இப்ப புலி ஒழித்து நாட்டை காப்பாற்ற கருணாவை பிரித்து பேச்சுவார்த்தைக்கு புலிகளை அழைத்து அவர்களை சோர்வடையச் செய்து கிளிநொச்சியும் முல்லைத்தீவும் படைகள் பிடிக்க யூஎன்பீ தான் காரணம் என்று சொல்கிறார்.
    பதவிக்கும் பணத்துக்கும் பல்டி அடிப்பதில் தொப்பி பிரட்டுவதில் எங்களை யாரும் வெல்ல முடியுமோ???

  2. ஆட்சியை பிடிப்பதே இவர்கள் நோக்கம்… தமிழர் மீதான கரிசனை இல்லை..
    இரண்டு பெரிய அரசியல் கட்சிகளினதும் செய்யல்பாடுகளை ஆராய்ந்து மக்களே முடிவு செய்யட்டும்…

    குண்டு சத்தம் இல்லை.. ஒப்பாரி இல்லை.. தினமும் மரண ஓலம் இல்லை… இனவெறி இல்லை…. யாரால் முடிந்தது?
    மேல் எழுந்த வாரியாக பார்க்கும் பொது ரணில் மிகுந்த தமிழ் பற்று கொண்டவர். தமிழருக்கு ஆதரவானவர் என்றே தோன்றும்.. ஆனால் உண்மை?

    மீண்டும் குண்டு சத்தம் வேண்டுமா? அமைதி வேண்டுமா? மக்களின் கையில்..

    மனோ கணேசனை பற்றி, அவர் தொப்பி பிரட்டியோ என்னவோ..
    ஆனால் சாதாரண மக்களின் பிரச்சனைகளை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் வீரன் தான்.. அந்த வகையில் அவரை பாராட்டத்தான் வேண்டும்…

    மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பவனே உண்மையான தலைவன்…

    சுயநல தலைவர்கள் எல்லாம் அழிந்து போவார்கள்.. வரலாறு அதை தான் சொல்லுகிறது..

  3. இன்றை வரையான நீண்ட அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுசன ஐக்கிய மக்கள் முன்னணியினால் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளைப் பிரதிபலிக்கும் வண்ணமாக முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுப்பொதியை (03.08.2000) பாராளுமன்றத்தினுள்ளேயே எரித்த அசிங்கமான அரசியல் வரலாறு அவருக்குண்டு.
    அதற்கு மேலாக 1983ம் ஆண்டில் அரசாங்க ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான இனக்கலவரத்தில் ரணிலுக்கும் பங்கிருந்ததை யாராலும் மறுக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் ரணில் அரசாங்கத்தின் ஒரு பலமிக்க அமைச்சராக இருந்தது மாத்திரமன்றி, அவரது மாமனார் உறவுக்காரரான ஜே.ஆர்;. ஜயவர்த்தனதான் அன்றைக்கு நாட்டின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருந்தார். அப்படியான கட்டத்தில் ரணில் ஒரு சாதாரண தலையீட்டைச் செய்திருந்தாலே அந்தக் கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. தமிழ் மக்களின் அவலங்களையும், படுகொலைகளையும் பார்;த்துக்கொண்டு மௌனமாக இருந்தார்.
    அதற்கு முன்பு 1981ம் ஆண்டு நடைபெற்ற யாழ். மாவட்ட சபைத்தேர்தலின் போது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கு வேட்டு வைக்கும் விதமான அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டது ரணிலும் அமைச்சராகச் செயற்பட்ட அதே அரசாங்கம்தான். ரணில் போன்றோரின் பலமான ஆதரவுடேனேயே யாழ்ப்பாணப் பொதுநூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டது. மேற்கண்ட செயற்பாடுகளில் ரணிலின் பங்களிப்பு இல்லாதிருந்தால் அவற்றைக் கண்டித்து ஒரு வார்த்தை தானும் வெளியிட்டிருப்பார். ஆனால் அப்படிச்செய்யவில்லையே.
    ரணில் அமைச்சுப் பதவி வகித்த அரசாங்கத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 1983ம் ஆண்டின் ஆடிக் கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கான நஷ்டஈட்டை வழங்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் நடவடிக்கை எடுத்தார். அதற்கு முன்பு கலவரத்தின் பின் சுமார் 11 வருடங்கள் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அப்படியான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. அதிலும் அந்தக் காலகட்டத்தி;ல் ரணில் இரண்டு வருடங்கள் மட்டில் பிரதமராகவும் இருந்திருக்கின்றார். அந்த வகையில் மனப்பூர்வமான தேவைப்பாடு இருந்திருந்தால் அவரால் அதனைச் செய்திருக்க முடியும்.
    அதுமட்டுமன்றி 1977ம் ஆண்டு ரணில் அங்கம்வகித்த ஐ.தே.கட்சியினர் ஆட்சி அமைத்ததன் பின்னரான (1993) வரையான காலத்தில் வரலாற்றில் தமிழ் மக்கள் மறக்கமுடியாதவாறான (1977, 1981, 1983 ) ஆகிய மூன்று பாரிய இனக்கலவரங்களை ஏற்படுத்தி நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களை பயங்கரவாதிகளான ஆயுதக்குழுவினரின் பின்னால் அணிதிரள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்பதனை தமிழ் மக்கள் இலகுவில் மறந்துவிட முடியாது.
    இந்நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்ததன் பின்னரேயே இலங்கையில் இனக்கலவரம் என்னும் கொடிய நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்பட்டது என்பதனை தமிழ்மக்கள் மறுக்கமுடியாது
    1983ம் ஆண்டின் ஆடிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கி வைத்ததுமன்றி அதன் போது வீடிழந்த மக்களுக்கென அருணோதய வீடமைப்புத்திட்டத்தின் கீழ் சீத்தாவக்கபுர மற்றும் கல்கிஸ்ஸையின் படோவிற்றை பிரதேசங்களில் வீடமைப்புத்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பது வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்கள் மீதான தனது தனிப்பட்ட கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
    குருநகரிலுள்ள தேவாலயம் ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சியின்போது (05.04.1993) விமானத் தாக்குதல்மூலம் சேதமாக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சிக்காலத்தின்போது குருநகரில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் தமிழ் இளைஞர்களுக்கான பாரிய சித்திரவதை முகாமாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ரணில் பலமிக்க அமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் வடக்கு-தெற்கின் உறவுப் பாலமாக விளங்கிய யாழ்.தேவி புகையிரதப் பயணத்தை அரசாங்கம் இடைநிறுத்தியது. அதே காலகட்டத்தில் கல்வி அமைச்சராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப் பிரதேச கல்வி வளர்ச்சிக்கென எதுவித சேவையும் ஆற்றியிருக்கவில்லை. குறைந்த பட்சம் தமிழ் மாணவரின் கல்வி நிலை குறித்த கலந்துரையாடல் ஒன்றைக் கூட நடாத்தியிருக்கவில்லை. மேலும் முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜேதுங்க தமிழ் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்களை மரத்தைச் சுற்றிப்படரும் கொடிக்கு ஒப்பிட்டுப் பேசிய காலகட்டத்தில் ரணில் பிரதமர் பதவியை வகித்துக் கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் அது பற்றி ஒரு வார்த்தை கூட அவர் மறுதலித்துப் பேசியதில்லை. அதிலிருந்தே அவரும் அவ்வாறான ஒரு கருத்தை ஆமோதிக்கின்றார் என்பதாகத் தானே அர்த்தப்படுகின்றது?
    ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுள் ஒன்றுக்கு தமிழ் இனத்தவர் ஒருவரை நியமிக்கும் வழக்கம் இருந்து வந்தது. ரணில் பதவியேற்கும் காலத்தில் கட்சியின் பொருளாளராகச் செயற்பட்டவர் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் நகரபிதாவான கே.கணேசலிங்கம் ஆவார். ஆனால் ரணில் கட்சித் தலைமையை ஏற்றபின் கணேசலிங்கம் ஒதுக்கப்பட்டார். கடைசியில் அவர் மனம் வெறுத்து,கட்சியை விட்டே விலகி பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து கொண்டார்.

  4. அழகாகக் கூறினீர்கள் குகபிரசாதம்!
    ஜெ.ஆரின் ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்தில் 5 தமிழ் லிங்கங்கள் முக்கிய பதவிகளில் அரசில் அங்கம் வகித்திருந்தார்கள். ஆனால், இன்றோ அவர்கள் நாட்டை (யு.என்.பியை) விட்டே துரத்தப்பட்டுள்ளார்கள். மற்றும், மனோ கணேசன் நடிப்பதற்கு சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. அவரின் தந்தையே (வி.பி.கணேசன்) நடிகன் தானே! கொழும்புவாழ் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக உலகழவில் பெரிதாகக் குரைத்துக்கொள்கிறார்.
    தமிழுணர்வு என்பது சுத்தமாக இல்லை!

  5. ஓமோம்… நீங்கள் பிரபாட்டை வேண்டி முக்கி விழுங்கின அனுபவத்தில சொல்லுறியள்… சாமி

  6. மீண்டும் ஏன் புலிகளை இழுக்கிறீர்கள்
    தமிழரை பிடித்த சனியன்கள் ஒழிந்து விட்டது,,,
    அதுகளை நினைக்காமல்… நடக்கப்போவதை பார்ப்போம்…

Leave a Reply

Previous post நலன்புரி நிலைய மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான அரசின் கரிசனையில் சந்தேகம்
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..