கத்தோலிக்க இளைஞர் பேரணி: போப் தொடங்கி வைத்தார்

Read Time:1 Minute, 57 Second

Pap-Rom.jpgகத்தோலிக்க நம்பிக்கையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் வாடிகனில் இளைஞர் பேரணியை போப் 16 ம் பெனடிக்ட் தொடங்கிவைத்தார். வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்ட கூட்டத்தில் போப் பேசினார். அப்போது அவர் கூறியது:

கிறிஸ்துவை நம்புவதால் ஏற்படும் சந்தோஷத்தை பிரகடனப் படுத்துங்கள். அவர் மீதான நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் உண்மையையும் அழகையும் கண்டறிந்தவர்கள் அவற்றைப் பகிர்ந்து கொள்ள எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும். புனித ஆவியை நம்புபவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றியும் உலகைப்பற்றியும் வரலாற்றைப் பற்றியும் உயர்வான பார்வை கிடைக்கும் என்றார்.

கத்தோலிக்க பிரிவுக்கு உலகம் முழுவதும் கடும் போட்டி உருவாகி இருக்கிறது. பிராட்டஸ்டன்ட், டைனமிக், எவாஞ்ஜலிக்கல் ஆகிய கிறிஸ்தவ பிரிவுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வேகமாக தலையெடுக்கின்றன.

இதைச் சமாளிகக் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு புத்துணர்வும் எழுச்சியும் ஊட்டுவதற்காக இந்தப் பேரணியை போப் தொடங்கி வைத்தார். பேரணி துவங்குவதற்கு முன் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் திரண்டிருந்ததாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈராக்கில் பாஸ்ரா மார்க்கெட் பகுதியில் கார்குண்டுத் தாக்குதல்: 28 பேர் பலி
Next post உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்: ஈரான் திட்டவட்ட அறிவிப்பு