மூன்று கைகளுடன் பிறந்த சீனக் குழந்தையின் மூன்றாவது கை வெற்றிகரமாக நீக்கம்

Read Time:1 Minute, 55 Second

China-boy(3hands).jpgமூன்று கைகளுடன் பிறந்த சீனக் குழந்தையின் மூன்றாவது கையை மருத்துவர்கள் திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை செய்து நீக்கினர். அறுவைச் சிகிச்சை முழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள அன்ஹுய் மாநிலத்தில் 2006 ஏப்ரல் 1-ம் தேதி ஒரு அதிசய ஆண் குழந்தை பிறந்தது. ஜிஜி என்று பெயரிடப்பட்ட அக் குழந்தைக்கு இரண்டு இடது கைகளும் ஒரு வலது கையும் இருந்தன. மூன்று கைகளுமே நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தன. ஆனால் இடது பக்கமிருந்த இரண்டு கைகளுமே சரியாக இயங்கவில்லை. எனவே, அக் குழந்தை, ஷாங்காய் குழந்தைகள் மருத்துவ மையத்துக்கு எடுத்து வரப்பட்டது.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் இடதுபுறத்தில் சிறியதாக, உடலை நோக்கி வளைந்தபடி இருந்த கையை அறுவைச் சிகிச்சை செய்து நீக்க முடிவு செய்தனர். அதன்படி திங்கள்கிழமை குழந்தையின் மூன்றாவது கை அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

இதில் சோகம் என்னவென்றால், ஜிஜிக்கு இப்போது இருக்கும் இடது கையில் உள்ளங்கை இல்லை. அந்தக் கை சரியாக இயங்கவும் இல்லை. இது தவிர, குழந்தைக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளது. இதனால் பிற்காலத்தில் அவனுக்கு முதுகுத் தண்டில் வளைவு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வீட்டோ அதிகாரம் உள்ள 5 நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை ஈரான் விருப்பம்
Next post தாய் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பில் கடந்த சனிக்கிழமை தரையிறங்கியமை குறித்து அந்நிறுவனம் விளக்கம்