தாய் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பில் கடந்த சனிக்கிழமை தரையிறங்கியமை குறித்து அந்நிறுவனம் விளக்கம்

Read Time:1 Minute, 54 Second

Thai.Airline.jpgகொழும்பிலிருந்து பாங்கொங்க் புறப்பட்டுச் சென்ற தாய் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பில் கடந்த சனிக்கிழமை தரையிறங்கியமை குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஜுன் 3 ஆம் நாள் தாய் ஏர்வேஸ் இண்டர்நேசனல் விமானம் டிஜி 308 கொழும்பிலிருந்து பாங்கொங்க் செல்வதற்காக நள்ளிரவு 1.25 மனியளவில் புறப்பட்டது.

விமானம் பறந்த பின்னர் 10 நிமிடங்களில் எச்சரிக்கை கருவிகள் செயற்படத் தொடங்கியதை விமானி கண்டுள்ளார். அதனையடுத்து பண்டாராநாயக்க விமான நிலையத்துக்கு மீண்டும் திரும்ப அவர் முடிவு செய்தார்.

விமானம் தரையிறக்கப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து மீண்டும் பறக்கத் தயாராக இருந்தது. விமானம் பறக்கத் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் 2 ஆவது இயந்திரத்தில் இருந்து சத்தம் வெளிப்பட்டதை விமானி அவதானித்துள்ளார். இதையடுத்து மீண்டும் கொழும்பு விமான நிலையத்துக்கு தரையிறக்கினார்.

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே தாய் தொழில்நுட்பக் குழுவினர் செயற்பட்டு வருகின்றனர். விமானத்தில் புதிய இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மூன்று கைகளுடன் பிறந்த சீனக் குழந்தையின் மூன்றாவது கை வெற்றிகரமாக நீக்கம்
Next post கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.