கனடா பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு டென்மார்க்கிலும் தொடர்பு.

Read Time:1 Minute, 41 Second

Denmark.1.jpg கனடாவில் அல் குவைடா பாணியிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இதுவரை 17 பேர் வரை கைதாகியுள்ளனர். இவர்களில் சிலருக்கும் டென்மார்க்கில் உள்ள தீவிரவாத போக்குடைய சிலருக்கும் தொடர்பிருப்பதாக போலீஸ் தெரிவிக்கிறது. ஒட்டாவாவில் உள்ள பாராளுமன்றக் கட்டிடம்இ சி.என் கோபுரம் போன்றவற்றை குண்டு வைத்து தகர்க்க இவர்கள் முயன்றார்கள் என்று தெரியவருகிறது.

ஆனால் இவர்களுக்கும் டென்மார்க்கில் உள்ள தீவிரப் போக்குடையோருக்கும் எவ்வாறான தொடர்புகள் நிலவின என்பதை செய்திகள் துலக்கமாகத் தெரிவிக்கவில்லை. இது இவ்விதமிருக்க டென்மார்க்கைச் சேர்ந்த மார்ஸ்க் கொன்ரேனர் கப்பல் ஒன்றில் 200 கிலோ கொக்கெயின் போதைவஸ்த்தை மும்பாயில் உள்ள போதைத் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டு பிடித்தனர்.
எஸ்.எல்.வோயர் என்ற கொல்கலனில் கொலம்பியாவில் இருந்து புறப்பட்டுஇ கொங்கொங்இ மலேசியா வழியாக வந்து மும்பாயை அடைந்திருக்கிறது இந்தக் கொண்டேனர். விசாரணைகள் தொடர்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அளவையில் பயணிகள் பஸ்ஸில் கைக்குண்டு மீட்பு
Next post கொழும்பு நவகம்புறயில் தீவிபத்து