By 7 June 2006

மட்டக்களப்பு வைத்தியசாலை காவலாளி படுகொலை

batticalo_+2.jpg மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ஆரையம்பதியைச் சேர்ந்த 25வயதுடைய சிவலிங்கம் ரஜனிகாந்த் நேற்று பிற்பகல் 4மணியளவில் வைத்தியசாலை நுழைவாயிலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.சைக்கிளில் வந்தவர்களே இவர்மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மட்டக்களப்பு வாழைச்சேனை தியாவெட்டுவான் பிரதேசத்தில் நேற்றுமாலை 5மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் வை.சதீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்துள்ளார். சூட்டுக் காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



Comments are closed.