பஹ்ரைனில் முதல் பெண் நீதிபதி
Read Time:58 Second
ஜூன் 8: வளைகுடா நாடுகளில், பெண்ணுக்கு நீதிபதி பதவியளித்த முதல் நாடு என்ற பெருமையை பஹ்ரைன் பெற்றுள்ளது. பஹ்ரைனைச் சேர்ந்த மோனா ஜெசெம் அல் கவாரி வளைகுடா நாடுகளில் முதல் பெண் நீதிபதியாவார். அவரை பஹ்ரைன் சிவில் நீதிமன்ற நீதிபதியாக அந்நாட்டு மன்னர் நியமித்தார்.
பக்ரைனின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் பெருமையடைவதாக கவாரி கூறினார். மேலும், பக்ரைனில் சீர்திருத்தங்கள் மேற்கொண்ட பிறகு, பெண்களை எப்போதும் மன்னர் ஊக்குவித்து வந்துள்ளார் என்பதால் தமது நியமனம் வியப்பளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.