குருவிட்ட மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதம்

Read Time:1 Minute, 39 Second

இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் நேற்றிரவு மினி சூறாவளியொன்று ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சுமார் 20நிமிடங்கள் வீசிய இந்த மினி சூறாவளி காரணமாக குருவிட்ட பகுதியிலுள்ள பத்து வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் எனினும் மக்கள் இடம்பெயரவில்லையென்றும் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக வீசிய கடும் காற்றினால் அனுராதபுரம் வைத்தியசாலையின் கூரைகளுக்கு சேதமேற்பட்டுள்ளது. மின்னல் தாக்கியதில் வைத்தியசாலையின் மின் பிறப்பாக்கி அழிவடைந்ததாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் விஜேகோன் தெரிவித்துள்ளார். அத்துடன் வைத்தியசாலையின் இரண்டு மின்தூக்கிகள் செயலிழந்துள்ளதாகவும், வைத்தியசாலையின் பிரசவகூடம் மற்றும் கதிரியக்க அறை என்பவற்றின் கூரைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வார்ட்டுகளுக்கான மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் டொக்டர் விஜேகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொன்சேகாவுக்கு அடுத்த நீதிமன்ற விசாரணையின் போது தண்டனை வழங்கப்படக் கூடும்..
Next post உரிமம் பெற்ற வங்கிகளை வடக்கு கிழக்கில் திறக்க மத்தியவங்கி அனுமதி