சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர், குழுக்களின் தலைவர் தெரிவு, எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்

Read Time:1 Minute, 50 Second

ஏழாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சமல் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டார். பிரதமர் டி.எம். ஜயரத்ன சமல் ராஜபக்ஸவின் பெயரை முன்மொழிந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய அதனை வழிமொழிந்தார். இதனடியடுத்து பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. பிரதி சபாநாயகராக பிரியந்தர ஜயசேகர தெரிவு செய்யப்பட்டார். இவரது பெயரை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரட்னசிறி விக்ரமநாயக்க முன்மொழிய ஐக்கிய தேசிய் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க வழிமொழிந்தார். அதேவேளை, குழுக்களின் பிரதித் தலைவராக ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேக்கா கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அவர் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அத்துடன், 7வது நாடாளுமன்றத்திற்காக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் துவக்கம்
Next post சவூதி அரேபியாவின் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்துள்ளவர்களிடையே மோதல், இலங்கையர் பலி