மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ள மக்களுக்கு தார்மீகப் பொறுப்புணர்வுடன் சேவையாற்றவும் -ஜனாதிபதி

Read Time:1 Minute, 57 Second

மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ள மக்களுக்கு தார்மீகப் பொறுப்புணர்வுடன் சேவையாற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதேநேரம் அமைச்சர்கள் அமைச்சரவையிலும், அமைச்சுக்களிலும் கூட்டுப் பொறுப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய அமைச்சர்களுக்கு நேற்று சத்தியப்பிரமாணம் செய்துவைத்து உரையாற்றிய ஜனாதிபதி, சகல அமைச்சுக்களும் முக்கியமானவையே என்பதை வலியுறுத்தியதுடன் அர்ப்பணிப்புடன் உழைத்து மக்களின் கௌரவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அரசின் செயற்பாடுகளக்கு அங்கீகாரமளித்துள்ள மக்கள் அரசின்மீது முழுமையான நம்பிக்கையையும் வைத்துள்ளனர். அந்த வகையில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடனேயே வாக்களித்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பினை அமைச்சர்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒருமித்த குரலில் செயற்பட்டு மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை
Next post ஜனாதிபதியிடம் நான்கு அமைச்சுப் பொறுப்புகள்..