ரிஎம்விபியின் மட்டு உள்ளுராட்சி மன்றங்களில் நிர்வாக மோசடிகள்..

Read Time:1 Minute, 32 Second

சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சி நடத்திவரும் உள்ளுராட்சி மன்றங்களில் நிதி மற்றும் நிர்வாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் முறைகேடுகள், அரச வாகன துஸ்பிரயோகம், நியமனங்களில் முறைகேடு என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடாது தனித்து போட்டியிடத் தீர்மானித்தன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணசபையிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கணனிக் கொள்வனவு, தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் -ஜெனரல் பொன்சேகா
Next post ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகத் தீர்மானம்