அமெரிக்காவில் விபரீதம்- 7வது மாடியை உடைத்து வெளியே வந்து தொங்கிய கார்

Read Time:2 Minute, 7 Second

அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரில் 7வது மாடியில் காரை நிறுத்தப் போன ஒருவர், வேகமாக காரை ஓட்டிச் சென்று சுவரில் இடித்ததால், கார் 7வது மாடியிலிருந்து வெளியே நீட்டியடி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துல்சா என்ற இடத்தில் இந்த பரபரப்புச் சம்பவம் நடந்தது. 67 வயதான ரால்ப் ஹட்சன் என்பவர் தனது மெர்சிடிஸ் காருடன் வந்துள்ளார். பின்னர் அங்குள்ள பேங்க்ஸ ஆப் அமெரிக்காவின் பல அடுக்கு கார் பார்க்கிங் நிலையத்திற்குச் சென்றார்.

7வது மாடியில் காரை நிறுத்தச் சென்றபோது கார் படுவேகமாக ஓடி அந்த தளத்தின் சுவரில் மோதியது. இதில் கார் வெளியே வந்து விட்டது. உடனடியாக சடர்ன் பிரேக் போட்டு காரை நிறுத்தினார் ரால்ப்.

காரின் பின் பகுதிய சுவரில் தொங்கியபடி காணப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும், அதிகாரிகளும், காரை முன்னோக்கி பத்திரமாக செலுத்த வைத்து பெரும் அபாயத்தைத் தவிர்த்தனர். ரால்ப் ஹட்சனும் உயிர் தப்பினார்.

அதிர்ஷ்டவசமாக ஹட்சனுக்கு இதில் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஹட்சன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.

ரிவர்ஸில் காரை ஓட்டி வந்தபோது ஹட்சனின் கால், பிரேக் பெடலுக்கும், ஆக்சலரேட்டருக்கும் இடையில் சிக்கிக் கொண்டதால் கார் படு வேகமாக போய் சுவரை இடித்துத் தள்ளி விபத்துக்குள்ளானதாக போலீஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கின் மீள்க்குடியேற்றம் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் -இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே காந்தா..!
Next post பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய-மாநில அரசு வழக்கறிஞர்கள்