பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சட்டவிரோதமான முறையில் கட்டடத்தை பயன்படுத்தவதாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

Read Time:1 Minute, 57 Second

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தமக்கு சொந்தமான கட்டமொன்றை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி வருவதாக இரண்டு புலம்பெயர் இலங்கையர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். வெள்ளவத்தை பிரதேசத்தில் தமக்கு சொந்தமான கட்டமொன்றை இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பயன்படுத்தி வருவதாக புலம்பெயர் இலங்கையர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்தக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதவான்களாக சிரானி திலகவர்தணஇ கே.ஸ்ரீபவன் மற்றும் பீ.ஏ.ரட்நாயக்க ஆகியோர் இந்த மனு மீதான விசாரணைகளை நடத்த உள்ளனர். சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகம் சிவராஜ் நாகராஜ் மற்றம் சிவராஜ் சரோஜினிதேவி ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர்இ காவல்துறை மா அதிபர்இ பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. குறித்த கட்டடத்தில் வளர்மதி என்ற மனுதாரர்களது உறவினர்கள் தங்குவதற்கு மேற்கொண்ட முயற்சியின் போது அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சட்டவிரோதமான முறையில் கட்டடத்தை பயன்படுத்தவதாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
Next post ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிவரும் 5ம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது..!