வருடாந்த வரவு செலவுத் திட்ட யோசனை ஒன்றை சமர்ப்பிக்க முடியாதளவிற்கு அரசாங்கம் பின்னடைவு -ருவான் விஜேவர்தன..!

Read Time:3 Minute, 8 Second

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தற்பேதைய அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அல்பர்ட் கிரசன்டில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வருடாந்த வரவு செலவுத் திட்ட யோசனை ஒன்றை சமர்ப்பிக்க முடியாதளவிற்கு அரசாங்கம் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.  தனியார் வங்கிகளிடமிருந்து அரசாங்கம் கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கலின் மூலம் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்கள் நட்டமேற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். விரைவில் எரிவாயு விலை அதிகரிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் அரசாங்சகம் நடவடிக்கை எடுக்கும் எனக் கருதியே மக்கள் இந்த அரசாங்கத்தின் வாக்களித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  தேர்தலுக்கு முன்னர் எரிவாயு மற்றும் பால் மா போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என அப்போதைய நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன நிறுவனங்கள் அழுத்தங்களை பிரயோகித்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும்இ தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் விலையேற்றம் தொடர்பில் முன்பு காட்டிய அதே கரிசனை தொடர்ச்சியாக காணப்படுமா என்பது சந்தேகமே என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் மக்களின் உரிமைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் குரல்கொடுக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்
Next post தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை..!