பல்லிகளை சாப்பிடும் அதிசய வாலிபர் ஒரு நாளைக்கு 25 பல்லிகளை விழுங்குகிறார்

Read Time:1 Minute, 46 Second

smile.1.jpg பல்லிகளை பார்த்தால் பலருக்கும் அறுவருப்பாக இருக்கும். மேலும் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டால் அதனால் ஏற்படும் விஷத்தன்மையால் வாந்தி-மயக்கம் ஏற்படும், உயிருக்கே கூட ஆபத்து உண்டாகலாம். ஆனால் ஒரு வாலிபர் பல்லியையே உணவாக சாப்பிடுகிறார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

அந்த வாலிபரின் பெயர் முகேஷ் தாகூர் (வயது 25). குஜராத் மாநிலத்தில் உள்ள கன்காவதி என்ற கிராமத்தில் வசித்து வரும் இவர் ஒரு நாளைக்கு காலை, மாலை, இரவு என 3 வேளையும் சுமார் 25 பல்லிகளை உணவாக சாப்பிடுகிறார். கடந்த 20 ஆண்டுகளாக பல்லிதான் அவரது முக்கிய உணவு. திருமணம் போன்ற ஏதாவது விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் எங்காவது பல்லி தென்படுகிறதா? என்றுதான் பார்ப்பார்.

இதுவரை 25 ஆயிரம் பல்லிகளை விழுங்கி இருக்கும் முகேஷ் தாகூர் ஏதாவது ஒரு நாளைக்கு பல்லி கிடைக்காவிட்டாலும் தவித்துப் போய் விடுகிறார். 5 வயதில் அவருக்கு இந்த பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

முகேஷ் தாகூர் பல்லிகளை சாப்பிடுவதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். பல்லியின் விஷத்தன்மை அவரை ஒன்றும் செய்யாதது ஆச்சரியமாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காங்கோ நாட்டில் கப்பலில் தீ விபத்து: 100 பேர் கருகி சாவு
Next post ஒரு மாத கால்பந்து திருவிழா ஜெர்மனியில் நாளை தொடக்கம்