ஜெனரல் சரத் பொன்சேகா கைது விவகாரம் குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்யப்படும் – ஐ.தே.க..!

Read Time:2 Minute, 13 Second

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா கைது விவகாரம் குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஜெனீவாவில் அமைந்துள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சரத் பொன்சேகா விவகாரத்தை எழுத்து மூலம் தெரியப்படுத்துமாறுஇ கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவிடம்இ ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். ரவி கருணாநாயக்க சந்திராணி பண்டார பாலித ரங்கே பண்டார மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க போன்றவர்கள் தங்களது பிரச்சினைகளை அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திடம் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த தீர்மானம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தமது கட்சியிடம் ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசனை பெற்றுக்கொள்ளவில்லை எனஅவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனினும் இந்த விவகாரங்களை ஊடக பிரச்சாரமாக தமது கட்சி பயன்படுத்தாது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீண்ட காலத்தின் பின்னர் ஒரே கொடியின் கீழ் மே தினம் கொண்டாடப்படுகின்றது – ஜாதிக ஹெல உறுமய..!
Next post மக்களின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ரணில் விக்ரமசிங்க