அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் சுமைகள் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது – ஜே.வி.பி தனது மேதினச் செய்தியில்..!

Read Time:1 Minute, 36 Second

போலியான வாக்குறுதிகளினால் உழைக்கும் வர்க்கத்தினர் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. நுகர்வுப் பொருட்களுக்கான விலைகள் வானளவு உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக் காட்டப்படுகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடிய அனைவருக்கும் தமது வணக்கங்களைத் தெரிவித்து கொள்வதாக ஜே.வி.பி தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் சுமைகள் மக்கள் மீது திணிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பளம் வழங்குவதாகவும்இ தனியார் துறையினருக்கு சம்பளம் வழங்குவதாகவும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதி வெறும் வாக்குறுதியாகவே காணப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.  மக்களின் ஜனநயாக உரிமைகளை வென்றெடுப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தினர் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மக்களின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ரணில் விக்ரமசிங்க
Next post யாழ் பருத்தித்துறை கொழும்புக்கிடையிலான பஸ்சேவை ஆரம்பம்..