வடக்கின் அபிவிருத்திக்கு விஷேட செயலணி -வடமாகாண ஆளுநர் நியமிப்பு

Read Time:2 Minute, 40 Second

வடமாகாணத்தின் கைத்தொழில் கூட்டுறவுத்துறை மற்றும் கிராமிய அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாக்கும் வகையில் நான்குபேர் கொண்ட விஷேட செயலணி நியமித்துள்ளதாக வடமாகாண ஆளுனர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார் தாம் நியமித்த இந்த செயலணி எதிர்வரும் 7ம் திகதி முதல் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் வடமாகாண பிரதிப்செயலாளர் இராசநாயகம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் மாகாண கைத்தொழில் பணிப்பாளர் கிராமிய அபிவிருத்தி பணி;ப்பாளர் கூட்டுறவு பணிப்பாளர் ஆகியோர் அடங்குகின்றனர் வடமாhணத்தில் கைத்தெரில் கூட்டுறவுத் துறை மற்றும் கிராமிய அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் அடிப்படையில் இந்த செயலணி தமது திட்ட அறிக்கையை எதிர்வரும் மூன்றுமாதக்காலத்திற்குள் தன்னிடம் சமர்ப்பிக்கவுள்ளதென்றும் ஆளுனர் சுட்டிக்காட்டியுள்ளார் இந்த செயலணி இம்மாதம் 7ம் திகதி தொடக்கம் மாவட்ட ரீதியில் கூட்டுறவு கிராமிய அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் துறைசார்ந்த அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானித்துள்ளது இந்தசெயலணி தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக யாழ் மாவட்டத்திலுள்ள கைத்தொழில் கிராமிய மற்றும் கூட்டுறவு ஆகிய துறைகளைச்சேர்ந்தவர்களுக்கென விஷேட செயலமர்வு ஒன்றை எதிர்வரும் 16ம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடத்தவுள்ளது இந்த செயலமர்வின்போது மூன்று துறைகளைச்சேர்ந்தவர்களுக்கு தெளிவுபடுத்தப் படவுள்ளதுடன் அவர்களது குறைநிறைகளும் கேட்டறியப்படும் மேற்படி மூன்று துறைகளையும் துரிதமாக மேம்படுத்துவதற்கான சில ஆலோசனைகளையும் இந்த செயலணி வழங்கவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு
Next post 4000 குடும்பங்கள் கிளிநொச்சியில் மீள்குடியேற்றம்.. 3700 வீடுகளை அமைக்கவும் திட்டம்