4000 குடும்பங்கள் கிளிநொச்சியில் மீள்குடியேற்றம்.. 3700 வீடுகளை அமைக்கவும் திட்டம்

Read Time:2 Minute, 22 Second

நான்காயிரம் குடும்பங்களை இம்மாத இறுதிக்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்த்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கதீஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நிவாரண கிராமங்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்போரை கட்டம் கட்டமாக அவர்களது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு குடியேற்றத்துக்கு ஏற்றவகையில் கிளிநொச்சி மேற்று மற்றும் கிழக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் குடியேற்றத்துக்கான விவர்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 3700வீடுகள் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்குவீட்டு நிர்மாணத் திட்டத்தின் கீழ் 3600வீடுகளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100வீடுகளுமே அமைக்கப்படவுள்ளன யு.என்.ஹெபிட்டாட் சேதமடைந்த 1500 வீடுகளை புனர்நிர்மாணம் செய்து கொடுக்க இணக்கம் தெரிவித்திருக்கின்றது. மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 30 பாடசாலைகள் தற்போது இயங்கி வருகின்றன. மோதல்களால் இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளோர் இதுவரையில் 5ஆயிரத்து 850ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் செய்கையினையும் சிறிய அளவில் மேட்டு நிலப்பயிர் செய்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கின் அபிவிருத்திக்கு விஷேட செயலணி -வடமாகாண ஆளுநர் நியமிப்பு
Next post வருடந்தோறும் மே 18ம் திகதி வெற்றிப்பேரணி -பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு