யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்புவாழ்க்கை வழமைக்கு திரும்ப வழிசெய்ய வேண்டும் -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்

Read Time:2 Minute, 7 Second

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடைதங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார் திருகோணமலைப் பிரதேசத்தில் உப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் பாரியளவு காணிகளை எடுத்துக்கொண்டுள்ளமையால் நிலாவெளி மக்கள் தமது அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது அரசாங்கத்தின் மக்கள் சபைத்திட்டம் அரசியல் மயப்படுத்தப்படாது சுயாதீனமாக இயங்ககூடிய ஓர் அமைப்பாக உருவாக்கப்படவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார் சமூர்த்தித் திட்டத்தைப்போன்று மக்கள் சபைத் திட்டமும் அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொழும்பு நடைபாதை வியாபாரிகள் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் நடைபாதை வியாபாரிகள் பாதாள உலகக்கோஷ்டியினரின் நெருக்குதல்களினால் இன்னல்களை எதிர்நோக்கி வந்தசமயத்தில் அரசாங்கமும் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி அனுமதிப்பத்திரம் தயாரித்த TMVP பிரேசசபை உறுப்பினர் கைது
Next post ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போய் இன்று 100நாட்கள்