ஈழத் தமிழர்களுக்குப் பணம் வந்தது குறித்து விசாரிக்க இன்டர்போலை நாடும் ஐபி-ரா

Read Time:4 Minute, 1 Second

ஈழத்திலிருந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புகலிடம் கோரி செல்லும் தமிழர்களிடம் பெருமளவில் பணம் புழங்குவது குறித்து விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாம் ஐபியும், ராவும். கொல்லம் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த 37 ஈழத் தமிழர்கள் களை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்து கொல்லம் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட 37 பேரில் முல்லைதீவை சேர்ந்த புரோக்கர் டென்னீசன் என்பவரை கேரள காவல்துறையினர் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் முல்லைதீவு மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களை இவரும் (டென்னீசன்) மற்றும் சிவா என்பவரும் படகுகள் மூலம் அழைத்து வந்து கேரளா வழியாக கனடா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளுக்கு கடல் மார்க்கமாக அனுப்பி வைப்பதும், அதற்காக ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதை தொழிலாகவே செய்து வருகிறார்களாம் டென்னீசனும், சிவாவும்.

சிவாவைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது பிடிபட்டுள்ள 36 பேரும் கடந்த ஏப்ரல் 26ம் தேதி கொச்சிக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து கடந்த 5ம் தேதி கொல்லம் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கேரள வழியாக இலங்கை தமிழர்களை அழைத்து செல்லும் நபர்கள் யார், எங்கிருந்து பணம் சப்ளை செய்யப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் டென்னீசனிடமிருந்து கேட்டு வருகிறது காவல்துறை.

பிடிபட்டுள்ள 36 பேரையும் தனியாக விசாரணை நடத்த ஐபி, ரா முடிவு செய்துள்ளது. மேலும் இவர்களிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து உயர் அதிகாரிகள் இன்று கொல்லம் வருகின்றனர்.

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் நடந்த சண்டையில் பொருளாதார ரீதியிலும் முல்லைதீவு தமிழர்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில், கனடா, ஆஸ்திரேலியா செல்ல லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க இவர்களிடம் பணம் எப்படி வந்தது, இவர்களுக்கு பணசப்ளை செய்தது யார், எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்து ரா மற்றும் ஐபி அமைப்புகளுக்கு சந்தேகம் வந்துள்ளதாம்.

இதற்கு விடை காணும் விதமாக இவர்களின் பிண்ணனி குறித்து விசாரிக்க இண்டர்போல் உதவியை நாடவு ஐபி, ரா முடிவுசெய்துள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே, கொல்லத்தில் கைது செய்யப்பட்ட புரோக்கர் டென்னீசனை இன்று கொல்லம் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் சிக்கியுள்ள 30 ஈழ அகதிகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் -சீமான்
Next post சிங்கத்தை ஒரு வாரம் முன்கூட்டியே ‘விடும்’ சன் பிக்சர்ஸ்!