அரந்தலாவ பிக்கு படுகொலைச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை – கருணா

Read Time:1 Minute, 39 Second

அரந்தலாவ பிக்கு படுகொலைச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு அரந்தலாவ பிரதேசத்தில் 33 பௌத்த பிக்குகளை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த படுகொலைச் சம்பவத்திற்கும் தமக்கு தொடர்பில்லை என கருணர், பௌத்த மாநாயக்கத் தேரர்களுக்கு விளக்கமளித்துள்ளார். இலங்கையில் சகல மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தின் சேவை மிகவும் அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்
Next post நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் தடை?