யாழ் குடாநாட்டில் சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்..

Read Time:2 Minute, 14 Second

யாழ்குடாநாட்டில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகளுடன் பல கொள்ளைக்காரர்களும் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை வெளியிடப்பட்டள்ளது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்கள் யாழ் குடாநாட்டு மக்களின் வீடுகளில் அவர்களுடன் சேர்ந்து தங்குவதாக கூறி பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதுடன் அவர்களில் சிலர் கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் சில தினங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணம் வந்த யாழ்ப்பாணவாசி ஒருவருடன் கூடப்பயணம் செய்த மன்னாரைச்சேர்ந்த ஒருவர் நட்பாக பழகியுள்ளதுடன் தனக்கு யாழ்ப்பாணத்தை சுற்றிப்பார்க்க உதவுமாறும்  கேட்டுள்ளார் அந்த மன்னார்வாசி நட்பு முறையில் பழகியதால் அதனை நம்பிய யாழ்வாசி அவரை யாழ்ப்பாணத்தில் 2ம் குறுக்குத்தெருவிலுள்ள தனது வீட்டில் தங்கவைத்திருந்தார் கடந்த வியாழக்கிழமை இரவு தானே இரவு சாப்பாடு வாங்கித்தருவதாக கூறிய பிரஸ்தாப மன்னார்வாசி அதில் மயக்க மருந்தை கலந்துகொடுத்துவிட்டு வீட்டுக்காரர்கள் அனைவரும்  மயங்கிய பின்னர் தனது கைவரிசையை காட்டியுள்ளார் அந்த வீட்டிலிருந்த பணம் நகை மற்றும் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் சுருட்டிக்கொண்டு அவர் தலைமறைவாகிவிட்டார் அடுத்த நாட்காலையில் விழித்த யாழ்வாசி இச்சம்பவம் குறித்து யாழ்பொலிஸாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றப்பட்டமைக்கு படையினரின் பயிற்சி பாதிப்பே காரணம்..
Next post முன்பக்கம் கறுப்புக் கண்ணாடியுள்ள வாகனங்களுக்கு தடை