இனி மாலையில் பாராளுமன்றம் கூடவுள்ளது..

Read Time:2 Minute, 6 Second

காலைவேளைகளில் கூடிவரும் பாராளுமன்றம் இனிமாலையில் மட்டுமே கூடவுள்ளது இந்தமாற்றம் விரைவில் வரவுள்ளது கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கட்சித்தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது இதற்கான முன்மொழிவை அரச கட்சிகொண்டுவந்திருந்தாலும் பிற கட்சித் தலைவர்களுட் இதை ஆமோதித்துள்ளதாகவும் எனவே காலை 9.30க்கும் கூடிய சபை இனி 1.30க்குத்தான் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு மாதத்தினதும் முதலாம் மற்றும் கடைசி வாரங்களில் திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிவரையே பொதுவாக பாராளுமன்றம் கூடுவது வழங்கமாகும் இப்போது மாற்றப்படவுள்ள நடைமுறையின்படி இந்த அமர்வு இரவு 7.00மணிவரை தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது ஆனால் இந்த அமர்வு 8.00மணிவரை தொடரவேண்டும் என்றும் ஒவ்வொரு அமர்வும் நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியினர் மேற்படி கட்சித்தலைவர் கூட்டத்தில் கேட்டுள்ளது இதற்கு 8.00மணிவரை நீடிப்பது என்பதை தாம் கருத்திற் கொள்வதாக உறுதியளித்த அரசு இரண்டாவது கோரிக்கையை நிராகரித்துள்ளது இதற்கு பதிலளித்த ஐ.தே.கட்சி குறைந்தபட்சம் திருத்தம் செய்யப்பட்ட பாராளுமன்ற அமர்வு வீடியோ என்றாலும் ஒளிபரப்பப்பட வேண்டும் எனக்கேட்டது ஆனால் இதற்கும் அரசாங்க தரப்பினர் செவிசாய்க்கவில்லை எனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனப்படுகொலையை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை -சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்
Next post இதுவரை 100மோட்டார் சைக்கிள்களே அடையாளம் காணப்பட்டுள்ளது