மரண தண்டனை கைதியை மணக்க அனுமதி
Read Time:1 Minute, 15 Second
பல்வேறு கொலை, கொள்ளையில் பலரை கொன்றவன் முகமது அதிக். பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இவனது முறைப்பெண் லைபா சகெர். ‘இருவருக்கும் சிறு வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டது. எனவே, முகமது அதிக்கை திருமணம் செய்து கொள்ள வேண்டியது, என்னுடைய அடிப்படை உரிமை. இதற்கு சிறை அதிகாரிகள் மறுக்கின்றனர். அதிக்கை மணக்க கோர்ட் அனுமதியளிக்க வேண்டும்’ என, லைபா, லாகூர் கோர்ட்டில் மனு செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி இஜாஸ் சவுத்ரி, அதிக்கை மணக்க லைபாவுக்கு அனுமதிஅளித்துள்ளார். இவர்களது திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், சிறைக்குள் இந்த திருமணம் நடக்கக்கூடாது, எனவும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
Average Rating