ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தி சாம்பியன் ஆனது இங்கிலாந்து

Read Time:3 Minute, 36 Second

ஆஸ்திரேலியாவை பவுலிங்கிலும், பந்து வீச்சிலும் அடித்து நொறுக்கி தனது முதலாவது ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து. இங்கிலாந்து இதுவரை ஒரு நாள் உலகக் கோப்பை, டுவென்டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என எதிலுமே சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் இந்த அவல நிலைக்கு நேற்று பால் காலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து அணி முற்றுப் புள்ளி வைத்து விட்டது. பார்படோஸில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்தது இங்கிலாந்து.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்கார்ரகளை இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பதம் பார்க்க தடுமாறிப் போய் விட்டது ஆஸ்திரேலியா. வார்னர், வாட்சன் தலா 2 ரன்களுடன் வெளியேறினர். மைக்கேல் கிளார்க் 27 ரன்கள் எடுத்து வீழ்ந்தார்.

பின்னர் வந்த ஹாடின் ஒரு ரன்னுடன் அவுட் ஆக, அணியை தூக்கி நிறுத்தினர் டேவிட் ஹஸ்ஸியும், ஒயிட்டும். ஹஸ்ஸி 59 ரன்கள் எடுத்தார். ஒயிட் 30 ரன்களைக் குவித்தார்.

இறுதியில், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

பின்னர் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து வெற்றி இலக்கை 17 ஓவர்களிலேயே எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது.

அந்த அணியின் கீஸ்வெட்டர் 63 ரன்களைக் குவித்தார். கெவின் பீட்டர்சன் தன் பங்குக்கு 47 ரன்களைக் குவித்தார்.

இந்த வெற்றி இங்கிலாந்துக்கு மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். பல காலமாக கிரிக்கெட் ஆடி வரும் இங்கிலாந்து அணி இதுவரை எந்த ஒரு உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றதில்லை. அதாவது ஐசிசி கோப்பை எதையும் வென்றதில்லை.

ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை ஆட்டங்களில் 1979, 1987, 1992 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால் கோப்பை கிடைக்கவில்லை.

இதேபோல 2004ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதிப் போட்டிக்கு அது முன்னேறியது. ஆனால் கோப்பை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஐசிசி கோப்பை ஒன்றை வென்று இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு இருந்து வந்த களங்கத்தை பால் காலிங்வுட் தலைமையிலான அணி துடைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தி சாம்பியன் ஆனது இங்கிலாந்து

Leave a Reply

Previous post மனம் வெறுத்து ஆற்றில் குழந்தையை வீசி தற்கொலைக்கு முயன்ற தமிழ் பெண் அமெரிக்காவில் கைது
Next post இத்தாலியில் விவாகரத்து கண்காட்சி