மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற முதல் இஸ்லாமியப் பெண் ரீமா ஃபாகி!

Read Time:2 Minute, 58 Second

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டியில் ரீமா ஃபாகி (வயது 24) வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்தவர் ரீமா. இவரது பெற்றோர் லெபனானைச் சேர்ந்தவர்கள் ஆவர். மிஸ் அமெரிக்கா 2010 போட்டியில் வென்ற முதல் இஸ்லாமியப் பெண் இவரே ஆவார். ரீமா சிறுமியாக இருந்தபோதே அவருடைய பெற்றோர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். ரீமாவின் வெற்றியால் டெட்ராய்ட் நகர் இடம் பெற்றுள்ள மிச்சிகன் மாகாணத்தினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். டெட்ராய்ட் நகரில் உள்ள டியர்பார்ன் ஹோட்டல் முன்பு கூடிய அரபு அமெரிக்கர்கள் அமெரிக்க கொடிகளை கையில் ஏந்தியபடி ஆடிப் பாடி, விடிய விடிய ரீமாவின் வெற்றியைக் கொண்டாடினர்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற ரீமா, பிசினஸ் நிர்வாகப் படிப்பையும் முடித்துள்ளார். தற்போது டெட்ராய்ட் மருத்துவ மையத்தில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவாக பணியாற்றி வருகிறார்.

சர்ச்ச்சையில் ரீமா:

மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற கையோடு புதிய சர்ச்ச்சையில் சிக்கியுள்ளார் ரீமா.

2007ம் ஆண்டு டெட்ராய்ட் நகரில் உள்ள ஒரு கிளப்பில் கவர்ச்சி [^] ஆட்டம் போட்டார் ரீமா என்பதுதான் அந்த சர்ச்சை. அந்த கிளப்பில் நடந்த நடனப் போட்டியில் கலந்து கொண்ட ரீமா, குட்டை டிரவுசர் மற்றும் பனியனுடன் ‘போல் டான்ஸ்’ ஆடினார்.

இப்போட்டியில், அவருக்கு முதல் பரிசு கிடைத்ததாம். பரிசுப் பணத்தை தனது பிராவில் சொருகி வைத்தபடி புன்னகையுடன் ரீமா காட்சியளிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

வளைந்து நெளிந்து போல் டான்ஸ் ஆடிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்களையும் டெட்ராய்ட் இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதையடுத்து ரீமா குறித்த தகவல்களை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுள்ளனராம் ‘மிஸ் அமெரிக்கா’ போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் -ஐ.நா கவலை தெரிவிப்பு
Next post மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம்- சிங்கள தளபதி