மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வா…?

Read Time:2 Minute, 41 Second

அரபு நாட்டைச் சேர்ந்த பெண், முதல் முறையாக மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவர் மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் என பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், மிஸ் யு.எஸ்.ஏ.,விற்கு சிக்கலோ சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டில் பிறந்தவர் ரீமா பாக்கி(24). இவர், தற்போது மிஸ் யு.எஸ்.ஏ., (அமெரிக்கா)வாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே அங்குள்ள பத்திரிகைகள் அவரை தேர்வு செய்தது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.அவர் ஏற்கனவே மதுபான பாரில் ஒவ்வொரு ஆடையாக களைந்து முடிவில் நிர்வாணமாக ஆடும் போல் டான்சராக இருந்தவர் என்பது தான் பத்திரிகைகளின் கோபத்திற்கு காரணம்.இதுகுறித்து அங்குள்ள டெய்லி மெயில் உட்பட பல நாளிதழ்களும் படத்துடன் செய்தி வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளன. இவர், 2007ம் ஆண்டு டெட்டராய்ட் நகரில் நடந்த ஸ்டிரீப் டான்சில் பங்கேற்ற படங்கள் தான் வெளியாகி உள்ளன.

இதையடுத்து பத்திரிகைகளின் கண்டனம் குறித்து தேர்வு கமிட்டி ஆய்வு செய்து வருகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் உலக அழகிப் போட்டியில் அமெரிக்கா சார்பில் ரீமா பங்கேற்பது சிரமமானதாகி விடும். இவ்வாண்டு லாஸ்வேகாஸ் நகரில் நடக்க இருக்கும் அழகிப் போட்டியிலும் அமெரிக்கா சார்பாக ரீமாவை அனுப்புவது இயலாததாகி விடும்.மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு வைரம் பதித்த கிரீடமும், நியூயார்க் நகரில் ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் சகல வசதிகளுடன் கூடிய வீடும், உதவித் தொகையும், சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.லெபனான் நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய அவரது பெற்றோர், டயர்போன் நகரில் வசித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபயங்களே புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் ‐ரொஹான் குணரட்ன
Next post வட இந்து சமுத்திரத்தில் அடுத்து ஏற்படும் புயலுக்கு ‘பந்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.