விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை..!

Read Time:1 Minute, 27 Second

கொழும்பு நகரில் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெடி பொருட்களைக் கொண்டுவந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுக்களை சந்தேக நபர் ஏற்றுக்கொண்டுள்ளார் இதனையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் லிங்கம்பத்மநாதன் என்ற சந்தேக நபருக்கே இந்த கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 செப்டம்பர் மாதம் 27ம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினமொன்றில் ரி.என்.ரி மற்றும் சி 4 ரக வெடிமருந்துகளைக் கொண்டுசென்றார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட இந்து சமுத்திரத்தில் அடுத்து ஏற்படும் புயலுக்கு ‘பந்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Next post யாழ். மாநகரசபை மேயர், யாழ். மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் எச்சரிக்கப்பட்டு விடுதலை..!