பாகிஸ்தானில் ‘யூ டியூப்’ (Youtube) இணையத்தள சேவைக்கு தடை

Read Time:1 Minute, 24 Second

பாகிஸ்தானில் ‘யூ டியூப்’ (Youtube) இணையத்தள சேவையை நிறுத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ‘யூ டியூப்’ இணையத்தளத்தில் மத ரீதியாக, அதற்கு எதிரான தகவல்கள் வெளியிடப்படுவதாகக் காரணம் காட்டியே பாக்.அரசாங்கம் இதற்குத் தடை விதித்திருக்கின்றது. முகமது நபிகள் தொடர்பான கேலிச்சித்திரங்கள் இந்த இணையத்தளத்தில் வெளியாகியிருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு முதன்முறையாக இவ்வாறான கேலிச்சித்திரங்கள் வெளியான போது, முஸ்லிம்கள் பெரும் கோபமடைந்திருந்தனர். பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அலுவலகத்தை சேர்ந்த அந்த அதிகாரி இது தொடர்பாக கூறுகையில், “இஸ்லாமை அவதூறாக சித்திரிக்கும் படக்காட்சிகள் இந்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட காரணத்தினாலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மே 28ல் சிங்கம் ரிலீஸ்
Next post மழை காரணமாக இடம்பெயர்ந்தோர்க்கு பத்து முகாம்கள் அமைப்பு..